Sreeleela: இனி 'டாக்டர்' ஸ்ரீலீலா! நடிப்பைத் தாண்டி நிஜத்திலும் சாதித்த தேவதை!

சென்னை: நடிகை ஸ்ரீலீலா தமிழ் சினிமாவில் பராசக்தி படத்தின் மூலம் நேரடியாக அறிமுகமானார். ஆனாலும் அதற்கு முன்னரே அவருக்கு தமிழ் சினிமாவில் ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர். படிப்பில் கெட்டிக்காரியான ஸ்ரீலீலா தனது டாக்டர் படிப்பை முடித்து அதிகாரப்பூர்வமாக டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. மேலும் இவருக்கான பட்டமளிப்பு விழா நேற்று அதாவது பிப்ரவரி 10ஆம் தேதி நடைபெற்றுள்ளது. இதைப் பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Actor To Doctor Sreeleela MBBS Graduation Video Goes Viral Fans Reactions

நடிகை ஸ்ரீலீலா தனது திரைப்பயணத்தை கன்னட சினிமாவான கிஸ் என்ற படத்தில் இருந்து தொடங்கினார். இவரது தாய் மொழி தெலுங்கு என்றாலும் இவர் தமிழ், கன்னடம், இந்தி, ஆங்கிலம் என மற்ற மொழிகளிலும் கை தேர்ந்தவராகவே விளங்குகிறார். இவரது தாயார் மருத்துவர் என்பதால் தனது மகளையும் மருத்துவராக்கி அழகு பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். அம்மாவின் ஆசைக்காக மருத்துவ படிப்பில் இணைந்தார் ஸ்ரீலீலா. அதற்கு தன்னை கல்வி ரீதியாகவும் தயார் படுத்திக் கொண்டார்.

சினிமா: இவருக்கு சினிமா ஆசை வந்ததால் சினிமாவில் நடிக்க முயற்சி எடுத்தார். இது மட்டும் இல்லாமல் நடனத்தை தன்னை திறமைசாலியாக மாற்றிக் கொண்டார். இளம் வயதிலேயே கல்வி, சினிமா, நடனம் என மெருகேற்றிக் கொண்டார். இது மட்டும் இல்லாமல் இரண்டு மாற்றுத் திறனாளி குழந்தைகளையும் தத்தெடுத்து வளர்த்தி வருகிறார். கன்னடம் மற்றும் தெலுங்கில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார். மிகவும் போட்டி நிறைந்த தெலுங்கு சினிமா உலகில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார்.

டாகடர் ஸ்ரீலீலா: இவரது நடிப்பில் கடைசியாக வெளியான படம், பராசக்தி. இந்த படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என மூன்று மொழிகளில் படம் ரிலீஸ் செய்யப்பட்டது. இவரது போர்ஷன் மிகவும் குறைந்த அளவில் இருந்தாலும், இவரது திரை வாழ்க்கையில் மிகவும் முக்கியமான படம். நடிப்பில் மட்டும் இல்லாமல், படிப்பிலும் கெட்டிக்காரியான ஸ்ரீலீலா தனது டாக்டர் படிப்பை முடித்து அதிகாரப்பூர்வமாக டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. மேலும் இவருக்கான பட்டமளிப்பு விழா நேற்று அதாவது பிப்ரவரி 10ஆம் தேதி நடைபெற்றுள்ளது. இதைப் பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X