Rakul preeth: கமல்ஹாசனோட சாச்சி 420 படத்தை 50 முறை பார்த்திருக்கேன்.. அப்போ ரொம்ப சின்னப் பொண்ணு!
மும்பை: நடிகர் கமல்ஹாசன், ரகுல் பிரீத் சிங், எஸ்ஜே சூர்யா, சித்தார்த் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள இந்தியன் 2 படம் வரும் 12ம் தேதி சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ள நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷன்கள் மிகப்பெரிய அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. படத்தின் இசை வெளியீடு கடந்த மாதம் 1ம் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது.
தொடர்ந்து இந்தியன் 2 படத்தின் ட்ரெயிலர் மும்பையில் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. மேலும் சிங்கப்பூர் மலேசியா உள்ளிட்ட இடங்களிலும் இந்த படத்தின் பிரமோஷன்கள் சிறப்பாக நடத்தப்பட்டுள்ளன. இதனிடையே இந்த பிரமோஷன்களில் பங்கேற்க முடியாத ரகுல் ப்ரீத் சிங் தனியாக அடுத்தடுத்த பேட்டிகளை கொடுத்து வருகிறார்.

இந்தியன் 2 படம்: நடிகர் கமல்ஹாசன். ரகுல் ப்ரீத் சிங். எஸ்ஜே சூர்யா, சித்தார்த், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள இந்தியன் 2 படம் வரும் 12ம் தேதி சர்வதேச அளவில் ரிலீசாக உள்ளது. இந்த படத்தின் இசை வெளியீடு கடந்த மாதம் 1ம் தேதியே நடைபெற்ற நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மும்பையில் படத்தின் ட்ரெயிலர் ரிலீஸ் நிகழ்ச்சியும் சிறப்பாக நடத்தப்பட்டது. இன்னும் சில தினங்களில் ஐதராபாத்தில் படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சியும் திட்டமிடப்பட்டுள்ளது. தொடர்ந்து படத்தின் ப்ரோமோஷன்களில் கமல்ஹாசன், ஷங்கர், சித்தார்த், எஸ்ஜே சூர்யா உள்ளிட்ட படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
சிறப்பான பிரமோஷன்கள்: சிங்கப்பூர், மலேசியா ஆகிய இடங்களிலும் இந்த படத்தின் பிரமோஷன்கள் மிகச் சிறப்பாக நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிகழ்வுகளில் பங்கேற்ற கமல்ஹாசன், ஷங்கர் மற்றும் சித்தார்த் ரசிகர்களின் கேள்விகளுக்கு அடுத்தடுத்து பதில் அளித்ததை பார்க்க முடிந்தது. பல சிறப்பான மற்றும் சுவாரசியமான விஷயங்களை ரசிகர்கள் அறிந்து கொள்ளவும் இந்த சந்திப்புகள் மற்றும் ப்ரோமோஷன்கள் காரணங்களாக அமைந்திருந்தன. இந்நிலையில் இந்த படத்தின் பிரமோஷனுக்காக தனியாக ரகுல் பிரீத் சிங் கொடுத்த பேட்டியில் நடிகர் கமல்ஹாசனின் சாச்சி 420 படத்தை தான் 50-க்கும் மேற்பட்ட முறை பார்த்ததாக பாராட்டு தெரிவித்துள்ளார்.
உடனடியாக ஓகே சொன்ன ரகுல் பிரீத்: தான் மிகவும் சிறு வயதில் இருந்த நிலையிலும் அந்தப் படம் தன்னை வெகுவாக கவர்ந்ததாக அவர் கூறியுள்ளார். இதனிடையே ஷங்கர் இயக்கத்தில் ஜீன்ஸ் படம் அவர்மீது ஈர்ப்பு ஏற்பட காரணமாக அமைந்ததாகவும் தெரிவித்துள்ளார். இதனால் இவர்கள் கூட்டணியில் உருவான இந்தியன் 2 படத்தில் தன்னுடைய கேரக்டர் உள்ளிட்ட எதையும் கேட்காமல் தான் உடனடியாக ஓகே சொன்னதாகவும் ரகுல் பிரீத் சிங் தெரிவித்துள்ளார். முன்னதாக இந்தியன் படத்தையும் பார்த்து தான் இம்ப்ரஸ் ஆனதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்தியன் 2 படத்தில் தான் மிகவும் துணிச்சலான கேரக்டரில் நடித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
கமலிடம் கேட்ட கேள்வி: தான் முதல் முறையாக கமலுடன் இணைந்திருந்த ஷெட்யூல் ஜூன் மாதத்தில் நடந்ததாகவும், மிகவும் அதிகமான வெயிலில் கமல்ஹாசன் சேனாபதி கேரக்டருக்கான மேக்கப்பில் இருந்தது குறித்து தான் கேள்வி எழுப்பியதாகவும் ரகுல் பிரீத் சிங் தெரிவித்துள்ளார்..இதனிடையே, ஜூன் மாதம் இந்தியன் 2 படப்பிடிப்பில் அவருடன் இணைந்து நடித்த போது இதுகுறித்து கேள்வி எழுப்பியதாகவும் அதற்கு கமல்ஹாசன், சிரித்துக் கொண்டே அதுதான் மகிழ்ச்சி என்று கூறியதாகவும் ரகுல் பிரீத் குறிப்பிட்டுள்ளார். இந்த அர்ப்பணிப்புதான் அவரது இத்தனை ஆண்டு திரைப்பயணத்திற்கு காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ரகுல் பிரீத் நெகிழ்ச்சி: மிகப்பெரிய புகழை பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் எல்லாம் உலகநாயகன் ஆக முடியாது என்றும் நம்முடைய வேலையை நாம் நேசித்தால் மட்டுமே இது சாத்தியம் என்பதை கமலை பார்த்து தான் உணர்ந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.கமல்ஹாசனின் அவ்வை சண்முகி படம் தான் சாச்சி 420 என ஹிந்தியில் வெளியானது. இந்த படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து வெற்றி படமாக மாறியது இந்தப் படத்தைதான் ரகுல் பிரீத் சிங் தற்போது பாராட்டியுள்ளார். கமலுடன் ரகுல் பிரீத் இணைந்து நடித்துள்ள இந்தியன் 2 படத்தில் தான் நடித்தது மிகப்பெரிய பாக்கியம் என்றும் அவர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











