»   »  நடிகைகளின் சதா அவதாரம் !

நடிகைகளின் சதா அவதாரம் !

Subscribe to Oneindia Tamil

கோலிவுட்டில், விலைமாது வேடத்தில் நடிக்கும் நடிகைகளின் லிஸ்ட் வர வரநீளமாகிக் கொண்டிருக்கிறது.

படத்தில் கவர்ச்சி தேவையா? எடு விலைமாது கேரக்டரை என்று கூறும் அளவுக்குவிலைமாதுக்களை டீல் செய்கிறார்கள் நம்ம ஊர் டைரக்டர்கள். இந்த கேரக்டர் உள்ளபடம் என்றால் நிச்சயம் அதில் கிளாமர், கில்மாவுக்கு குறைவிருக்காது என்பதும்பாரம்பரியமாகி விட்டது.

விதி விலக்காக விலைமாதுவை வைத்து தத்துவங்கள், அறிவுரைகளை சொல்லிஎப்போதாவது சில படங்கள் வரும். இப்போது கோலிவுட்டில் இது விலைமாது சீசன்போல. தயாரிப்பில் இருக்கும் பல படங்களில் ஹீரோயின்கள் அந்த மாதிரிகேரக்டர்களில் தான் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

புதுப்பேட்டையில் ஸ்னேகா விபச்சாரப் பெண்ணாக நடித்தது பெரும் பரபரப்பைஏற்படுத்தியது. இத்தோடு ஒழிஞ்சாருடா ஸ்னேகா என்று சொன்னவர்கள் ஏராளம்.ஆனால் அந்தக் கேரக்டரை படு அழகாக, நேர்த்தியாக செய்து பாராட்டுக்களைப்பெற்றார் ஸ்னேகா. தொடர்ந்து தமிழ், தெலுங்கு, விளம்பர படங்கள் என கலக்கிவருகிறார்.

இப்போது குண்டுக்கல்லு நமீதா அழகான பொண்ணுதான் படத்தில் விபச்சாரப்பெண்ணாக நடித்து வருகிறார். சும்மாவே சுழற்றியெடுப்பார். விபச்சாரப் பெண்கேரக்டர் வேறு, சென்சாரில் தப்பி வெளியே வந்தால் அதுவே சக்ஸஸ்தான்!.

ஆனால் இந்தப் படத்தின் கதை ரொம்ப வித்தியாசமாக இருக்கிறது. ஊரெல்லாம்சேர்ந்து நமீதாவின் உடம்பில் விளையாட ஆசைப்படுமாம். ஆனால் ஒருத்தனுக்குமட்டும் நமீதாவின் மனதில் உட்கார்ந்து கொள்ள ஆசை பிறக்குமாம். ஆனால் அதைச்சொல்ல அவன் தயங்குகிறானாம். ஏனாம்?

காரணம் அழகான உருவம் தன்னிடம் இல்லையே என்ற தாழ்வு மனப்பான்மையால்.இப்படிப் போகிறது அழகான பொண்ணுதான் கதை.

அம்முவாகிய நான் படத்தின் கதை சற்றே வித்தியாசமானது. எல்லாவிலைமாதுக்களும் ஒவ்வொரு சோகக் கதையை வைத்திருப்பார்கள்.மெஷினாகத்தான் இயங்குகிறோம் என்பார்கள். ஆனால் அம்மு நாயகியானபாரதியோ, விரும்பி விபச்சாரத்தை ஏற்கும் பெண்ணாக வருகிறாராம்.

பொண்ணுங்ககிட்ட ஆம்பளை வர்றான்னா அது நிச்சயம் காமத்தை வைத்துத்தான்.காதலாவது, கத்திரிக்காயாவது என்று புரட்சிகரமாக பேசுகிறாராம் இப்படத்தில் பாரதி.

தாசி குலத்தைச் சேர்ந்த பெண்ணாக தனம் படத்தில் நடிக்கிறார் சங்கீதா. உயிர்படத்தைப் போல இதிலும் இவருக்கு பின்னி எடுக்கக் கூடிய கேரக்டராம். தனத்தில்புகுந்து விளையாடியுள்ளாராம்.

செங்காத்து படத்திலும் பாயலுக்கு தாசி குலப் பெண் வேடம்தானாம். ஆனால் அதில்ஈடுபடாமல் தனது கற்பைக் காப்பாற்றப் போராடும் பெண்ணாக நடிக்கிறாராம் பாயல்.

காதல் கோட்டையோ, காமக் கோட்டையோ, ரசிகர்களுக்கு நல்ல வேட்டை!

Read more about: kollywoods new obession
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil