»   »  டோலிவுட்டில் டாலடிக்கும் மல்லூஸ்!

டோலிவுட்டில் டாலடிக்கும் மல்லூஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கோலிவுட்டில் கொத்துப் புரோட்டா போட்டு வரும் மலையாள சுந்தரிகள் இப்போதுடோலிவுட்டையும் அதகளப்படுத்தி வருகிறார்கள்.

மலையாளத்தில் ஒரே ஒரு படத்தில் நடித்து விட்டு அப்படியே கோடம்பாக்கத்திற்குபாஸ்போர்ட் எடுத்து விடுவது மலையாள நடிகைகளின் இப்போதைய தொழில்அணுகுமுறை. மலையாளத்தில் எண்ணி எண்ணி சம்பளம் கொடுப்பதாலும்,கோடம்பாக்கத்தில் எண்ணிக்கையே தெரியாத அளவுக்கு அள்ளிக் கொடுப்பதாலும்இந்த நிலை.

இதன் விளைவு, மலையாளத்தில் நாயகிகளே இல்லை எனும் அளவுக்கு அங்குசுதேசி ஹீரோயின்களுக்குப் பெரும் பஞ்சமாகியுள்ளது. எனவே இருக்கிறநடிகைகளை வைத்து அங்கு படம் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

கோலிவுட்டை ரணகளப்படுத்தி வரும் மலையாள ஹீரோயின்கள் இப்போது நைசாகதெலுங்குத் திரையுலகிலும் ஊடுறுவ ஆரம்பித்துள்ளனர். இதுவரை இல்லாதஅளவுக்கு அதிக அளவில் மலையாள நடிகைகள் தெலுங்குத் திரையுலகில்கோலோச்சி வருகிறார்கள்.

இதை தொடங்கி வைத்தவர் ஆசின்தான். ஆரம்பத்தில் அவர் தெலுங்கில்தான்பிரபலமாக நடித்துக் கொண்டிருந்தார். அங்கிருந்துதான் தமிழுக்கு வந்தார். இப்போதுமறுபடியும் தெலுங்கில் ஒரு ரவுண்டு அடிக்க அவர் ஆயத்தமாகி வருகிறார்.

இவரைத் தொடர்ந்து மீரா ஜாஸ்மின் தெலுங்குக்குத் தாவினார். அவரைத் தொடர்ந்துகோபிகாவும் தெலுங்குக்குப் போனார். இப்போது நயனதாரா அங்கு டேராபோட்டுள்ளார். அவருக்கு அங்கு டிமாண்ட் ஏற்பட்டுள்ளதாம்.

ஸ்ரீதேவிகா, சம்விருத்தா ஆகிய மலையாள நடிகைகளுக்கு அங்கு ஆளுக்கொருபடம் கையில் இருக்கிறதாம். சந்தியாவும் சப்ஜாடாக தெலுங்கில் காலூண்றியுள்ளார்.

இவர்களைத் தொடர்ந்து அடுத்தடுத்து பல நடிகைகளும் தெலுங்குப் பக்கம்தேட்டையைப் போடத் தயாராகி வருகிறார்களாம்.

தமிழ்நாட்டைப் போலவே, தாய் மொழி அல்லாத ஹீரோயின்கள்தான் தெலுங்கிலும்பெரும்பான்மையாக டப்பு சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஹீரோக்கள் மட்டும்தான்மண்ணின் மைந்தர்களாக இருக்கிறார்கள், தமிழைப் போலவே.

அசத்துங்க சேச்சிகளே!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil