»   »  நடிகைளுக்கு பஞ்சம்!!

நடிகைளுக்கு பஞ்சம்!!

Subscribe to Oneindia Tamil

நல்ல நடிப்புத் திறன் கொண்ட முன்னணி நடிகைகள் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி வருவதால் தமிழ்சினிமாவில் நல்ல நடிகைகளுக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளது.

கடந்த 7 மாதங்களில் 4 முன்னணி நடிகைகள் தமிழ் சினிமாவிலிருந்து விலகியுள்ளனர். இதனால் திறமையானகதாபத்திரங்களுக்கு நடிகைகளை சிரமப்பட்டு தேடும் நிலைக்கு இயக்குனர்கள் ஆளாகியுள்ளனர்.

அவர்களை வைத்து தயாராக இருந்த படங்களின் கதை அமைப்பும் மாற்றி அமைக்கும் நிலை உருவாகியுள்ளது.கடந்த 7 மாதங்களில் நடிகைகள் ஜோதிகா, சோனியா அகர்வால், லைலா, உமா ஆகியோர் சினிமாவை விட்டுமெல்ல மெல்ல விலகியுள்ளனார். இதற்கு காரணம் திருமணம்.

திரையுலகத்திற்கு வர சிரமப்பட்டு, பல போராட்டங்களை சந்தித்து நல்ல நடிகை என்ற நிலையை அடையும் போதுதிருமணம் முடித்து நடிப்புக்கு முழுக்கு போட்டு விடுகின்றனர். நேருக்கு நேர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குஅறிமுகமான சிம்ரன், படிப்படியாக முன்னேறி, எந்த கதாபாத்திரத்திலும் நடிப்பார் என்ற பெயரை பெற்றார்.

திடீரென திருமணம் முடிந்து டெல்லி சென்றார். இப்போது அவர் நடிக்க விரும்பினாலும் திருமணம் முடிந்ததும்பழைய இளமை இல்லை என அவருக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன.

அவரைத் தொடர்ந்து லைலாவும், உமாவும் திருமணம் முடித்துக் கொண்டு தமிழ்நாட்டை விட்டுச் சென்றனர்.இதில் பெரிய அளவில் சம்பளம் கேட்டு தயாரிப்பாளர்களை டார்ச்சர் செய்யாமல், நல்ல கதைகளை மட்டும்தேர்ந்தெடுத்து நடித்தவர் உமா.

இதனால் படத்தின் வெற்றிக்காக குத்துப்பாட்டு, சம்பந்தமில்லாத சண்டைக்காட்சிகள் போன்றவற்றின் பின்னால்செல்லாத இயக்குனர்கள் தங்கள் படங்களுக்காக உமாவைத் தேடி சென்றனர். சினிமாவுக்கு முழுக்குப்போடாவிட்டாலும் தொடாமலே படத்தைத் தவிர வேற எந்த வாய்ப்பும் உமாவுக்கு இல்லை.

லைலாவும் நந்தா, பிதாமகன் போன்ற படங்களில் நடித்து இயக்குனர்கள் மனதில், நன்மதிப்பை பெற்றார். இவர்திருமணம் முடித்து சொன்த ஊர் சென்றதும் தமிழ் சினிமாவுக்கு இழப்புதான்.

இவர்களைத் தொடர்ந்து வரும் மாதங்களில் ஜோதிகாவும், சூர்யாவும், சோனியா அகர்வாலும், இயக்குனர்செல்வராகவனும் திருமணம் செய்து கொள்கின்றனர். இதற்காக அவர்கள் சினிமாவிலிருந்து விலகஆரம்பித்துவிட்டனர். இதனால் இளம் நடிகைகளுக்கு மவுசு கூடியுள்ளது.

ஜோதிகாவை எழுதப்பட்ட கதைகளுக்கு வேறு நடிகைகள் பொருத்தவில்லை. இதனால் கதை அமைப்பில் மாற்றம்செய்யும் நிலை சினிமா வந்துள்ளது.

ஜூலை காற்றில் படத்தில் சோனியா நடிக்காததாலும், செல்வராகவனின் தெலுக்கு படத்தில் ஜோதிகாநடிக்காததாலும் கதை அமைப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இப்போதைக்கு நல்ல கதாபாத்திரங்களுக்கு கோபிகா, ஸ்னேகா, பாவ்னா போன்ற மிகச் சிலரையே நல்லஇயக்குனர்கள் நம்பியிருக்கிறார்கள். ஆனால், இதில் ஸ்னேகாவையும் கோபிகாவையும் தெலுங்கு லவட்டிக்கொண்டுவிட்டதால் பாவ்னாவில் காட்டில் அடை மழை. அவர் கால்ஷீட் தர முடியாமல் தவித்துக்கொண்டிருக்கிறார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil