சேலையில் கூட இவ்வளவு கவர்ச்சியா... மஸ்த்ராம் நடிகையின் போட்டோவை பார்த்து மிரளும் ஃபேன்ஸ்!
சென்னை: மஸ்த்ராம் நடிகை ஷேர் செய்துள்ள சேலை போட்டோ இன்ஸ்டாவை சூடாக்கியுள்ளது.
பிரபல பாலிவுட் நடிகை ஆபா பால். முன்னணி மாடலாகவும் உள்ளார்.
ஆபா பால் நடித்த காமசூத்ரா 3டி படம் உலகளவில் ஃபேமஸ் ஆனது. தொடர்ந்து பல விளம்பர படங்களில் நடித்து வரும் ஆபா பால் வெப் சீரிஸ்களையும் விட்டு வைப்பதில்லை.

டாட்டூ பிரிய
மஸ்த்ராம் வெப் சீரிஸில் மலையாள ஆன்ட்டியாக நடித்தார் ஆபா பால். அவரது நடிப்பு பெரும் பாராட்டை பெறவே அடுத்தடுத்து பல வெப்சீரிஸ்களில் புக்கானார். தொடர்ந்து பல வெப் சீரிஸ்களில் நடித்து அவரும் ஆபா பால், ஒரு டாட்டூ பிரியை ஆவார்.

கண்களுக்கு விருந்து
தனது கைகள் மார்பு என உடம்பில் பிடித்தமான டாட்டூக்களை வறைந்து தன்னுடைய ரசிகர்களின் கண்களுக்கு விருந்து படைத்து வருகிறார். தனது டாட்டூக்களை காட்ட வேண்டும் என்பதற்காகவே அடிக்கடி அரைகுறை உடையில் தரிசனம் கொடுத்து வருகிறார்.

சிவப்பு நிற சேலையில்
இதனாலே அவரது இன்ஸ்டாகிராம் பக்கம் முழுவதும் கவர்ச்சி போட்டோக்கள் நிரம்பி வழிகிறது. இந்நிலையில் நடிகை ஆபா பால் சேலையில் செம கிளாமர் காட்டி ரசிகர்களை உசுப்பேற்றியுள்ளார். சிவப்பு நிற ஜாக்கெட், கோல்டன் கலர் வேலைப்பாடு செய்யப்பட்ட சேலை.. நெற்றியில் பெரிய பொட்டு என வேற லெவலில் உளளார்.

பர்ஃபெக்ட்டா இருக்கீங்க
மேலும் அந்த போட்டோவுக்கு நான் பெங்காலி பெண் மாதிரி இருக்கிறேனா என்றும் கேட்டுள்ளார் நடிகை ஆபா பால். அவரது இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் பர்ஃபெக்ட் பெங்காலி பெண் போன்றே இருக்கிறீர்கள் என்றும் தெரிவித்து வருகின்றனர்.

குவியும் லைக்ஸ்
அதே நேரத்தில் சில நெட்டிசன்கள் இவ்வளவு கவர்ச்சி ஆகாதும்மா என்றும் கேலி செய்துள்ளனர். ஆபா பாலின் இந்த போட்டோ லைக்ஸ்களை குவித்து வருவதோடு இன்ஸ்டாகிராமையும் சூடாக்கி வருகிறது.


Click it and Unblock the Notifications











