எனக்கு அட்ஜஸ்ட்மெண்ட் அப்ரோச் வந்திருக்கிறதா?.. பிரபல நடிகை ஓபன் டாக்
சென்னை: சினிமாவில் அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்னை இன்னும் தீர்ந்தபாடில்லை. நடிகைகளை படுக்கைக்கு அழைப்பதை பலர் தங்களது வாடிக்கையாக கொண்டிருக்கிறார்கள். அதுகுறித்து சமீபகாலமாகவே நடிகைகள் மௌனம் கலைத்துவருகிறார்கள். இந்தச் சூழலில் சீரியல் நடிகை ஆர்னிகா சினிமா மற்றும் சின்னத்திரையில் இருக்கும் அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்னை குறித்து லேட்டஸ்ட் பேட்டியில் ஓபனாக பேசியிருக்கிறார். அது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது.
சினிமா என்றாலே ஆணாதிக்கம் நிறைந்தது என்ற கூற்று பல காலமாக உண்டு. அதனை உறுதிப்படுத்தும்படிதான் சினிமாவில் பணிபுரியும் பெரும்பாலான ஆண்கள் இருக்கிறார்கள். பெண் இயக்குநர், பெண் ஒளிப்பதிவாளர் எல்லாம் ரொம்பவே கம்மிதான். நடிப்பில் பெண்கள் அதிக அளவு இருந்தாலும் அவர்களுக்கு உருவாக்கப்படும் பிரச்னை மற்ற பெண்களை திரைத்துறைக்குள் வருவதற்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது. அப்படி உள்ள பிரச்னைகளில் தலையாய பிரச்னைதான் அட்ஜஸ்ட்மெண்ட்.
அட்ஜஸ்ட்மெண்ட்: சினிமாவில் அறிமுகமாக வேண்டுமா, தொடர்ந்து சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்க வேண்டுமா அதற்கு அட்ஜஸ்ட்மெண்ட் செய்து தன்னுடன் படுக்கையை பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று சிலர் ஓபனாகவும், மறைமுகமாகவும் நடிகைகளிடம் அப்ரோச் செய்யும் வழக்கம் காலங்காலமாக இருந்துவருகிறது. பெண்களுக்கு உரிமை வேண்டும் என்று குரல்கள் ஓங்கி ஒலிக்கும் இந்தக் காலத்திலும் அந்த அட்ஜஸ்ட்மெண்ட் அப்ரோச் ஓய்ந்தபாடில்லை என்பதுதான் கள எதார்த்தம்.
வாய் திறந்த நடிகைகள்: சில வருடங்களுக்கு முன்னர் எல்லாம் தங்களுக்கு அட்ஜஸ்ட்மெண்ட் அப்ரோச் வந்தால் சைலெண்ட்டாக மறுத்துவிட்டு அதனை பொதுவெளியில் சொல்லாமல் இருந்தார்கள் நடிகைகள். இப்போது பலரும் அதுகுறித்து வெளிப்படையாக பேசிவருகிறார்கள். அது ஆரோக்கியமான விஷயமான ஒன்றகாவே பார்க்கப்படுகிறது. லேடி சூப்பர் ஸ்டார் நயன், நடிகை வரலட்சுமி உள்ளிட்டோரும் தங்களுக்கு அட்ஜஸ்ட்மெண்ட் அப்ரோச் வந்ததாக ஓபனாக பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்ச்சியாக பேட்டிகள்: அதுமட்டுமின்றி நடிகை தேவி ப்ரியாவும் அட்ஜஸ்ட்மெண்ட் குறித்து பேசியிருந்தார். அதேபோல் பலரும் தங்களது மௌனத்தை கலைத்து தங்களுக்கு ஏற்பட்ட மோசமான அனுபவங்களை பகிர்ந்துவருகின்றனர். அந்தவகையில் சீரியல் நடிகை ஆர்னிகாவும் தனக்கு நேர்ந்த மோசமான அனுபவத்தை பகிர்ந்திருக்கிறார். இதுகுறித்து தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், "ஏஐ தொழில்நுட்பம் பலரது வாழ்க்கையை சீரழிக்கிறதுதான்.
வேண்டுமென்றே பேசுகிறார்கள்: இதில் என்ன கொடுமை என்றால் அது ஏஐ வீடியோ என்று தெரிந்திருந்தாலும் அந்தப் பெண்ணை பற்றி தவறாகத்தான் பேசுகிறார்கள். அதேசமயம் நீ என்ன வேண்டுமானாலும் பேசிக்கொள் என்பது போன்றுதான் நிறைய பேர் இருக்கிறார்கள். அது நல்ல விஷயம்தான். அட்ஜஸ்ட்மெண்ட்டை பொறுத்தவரை சினிமா துறையில் நான் நிறைய நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். அதாவது பல பெண்கள் என்னிடம் அதை பற்றி சொல்லியிருக்கிறார்கள்.
எனக்கு வரவில்லை: அதாவது, அக்கா என்னிடம் அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய சொன்னார்கள். அதனால்தான் அதற்கு நான் வரவில்லை என்று பலரும் சொல்லியிருக்கிறார்கள். எனக்கு நல்ல விஷயம் என்னவென்றால் என்னிடம் யாரும் அப்படி கேட்டதில்லை. நான் அந்த சூழ்நிலையை எதிர்கொண்டதில்லை. அதனால் இந்த விஷயத்தில் நான் ரொம்பவே லக்கியான பெண் என்று நினைக்கிறேன்" என்றார். முன்னதாக ஆர்னிகா சில சீரியல்களில் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி இசையமைப்பாளரும், நடிகருமான ஜிவி பிரகாஷுடனும், தொகுப்பாளரான மாகாபா ஆனந்த்துடனும் ஒரு ஆல்பம் பாடலில் ஆர்னிகா நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











