பட்டாம்பூச்சிக்கு கைகால் முளைத்த பெண் இவளோ... ஆத்மிகாவை வர்ணிக்கும் ரசிகாஸ்!

சென்னை: சமீபத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகி ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்ற கோடியில் ஒருவன் படத்தில் கதாநாயகியாக நடித்து பாராட்டுக்களை பெற்றார் நடிகை ஆத்மிகா

மீசைய முறுக்கு படத்தின் வெற்றிக்கு பிறகு கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடித்த நரகாசூரன் மற்றும் காட்டேரி உள்ளிட்ட திரைப்படங்களின் ரிலீஸ் இன்றுவரை தாமதமாகிக் கொண்டு உள்ளது

கோடியில் ஒருவன் படத்திற்கு பிறகு தெலுங்கு திரைப்பட உலகிலும் இவருக்கு மார்க்கெட் உயர்ந்திருக்க இப்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பட்டாம்பூச்சிக்கு கைகால் முளைத்த தேவதை போல ஆத்மிகா வெளியிட்டுள்ள அழகிய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர்

கதாநாயகியாக அறிமுகம்

கதாநாயகியாக அறிமுகம்

இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் ஹிப் ஹாப் இசையை அறிமுகப்படுத்திய ஹிப் ஹாப் தமிழா ஆதி முதல் முறையாக ஹீரோவாக நடித்த மீசைய முறுக்கு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை ஆத்மிகா இந்த திரைப்படம் கமர்சியல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.

நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது

நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது

மீசைய முறுக்கு வெற்றிக்குப் பிறகு ஆத்மிகாவுக்கு படவாய்ப்புகள் குவிந்தது அந்த வகையில் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் சஸ்பென்ஸ் திரில்லர் கதையில் உருவான நரகாசூரன் திரைப்படத்தில் நடித்து முடித்தார். அதைத்தொடர்ந்து இயக்குனர் டிகே இயக்கத்தில் காட்டேரி என்ற ஹாரர் படத்திலும் நடித்து முடித்துள்ளார். இரண்டு திரைப்படங்களும் படப்பிடிப்பு பணிகள் மொத்தமும் முடிந்து ரிலீசுக்கு தயாராக இருந்தும் இன்று வரை வெளியாக முடியாமல் தாமதமாகி கொண்டுள்ளது. இதில் நரகாசூரன் நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது என்ற தகவல் கிடைத்துள்ளது. மீசைய முறுக்கு க்கு பிறகு எந்த ஒரு திரைப்படமும் வெளியாகவில்லை என்ற வருத்தத்தில் இருந்த ஆத்மிகாவுக்கு ஜாக்பாட் அடித்தது போல விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக கோடியில் ஒருவன் படத்தில் நடித்தார்.

தெலுங்கிலும் மார்க்கெட் உயர்ந்துள்ளது

தெலுங்கிலும் மார்க்கெட் உயர்ந்துள்ளது

ஆனந்தகிருஷ்ணன் இயக்கத்தில் வெளியான கோடியில் ஒருவன் திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றதை தொடர்ந்து தெலுங்கிலும் இந்த திரைப்படம் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி அங்கும் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. பொதுவாக விஜய் ஆண்டனியின் அனைத்து திரைப்படங்களும் தெலுங்கிலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெறும் சூழலில் கோடியில் ஒருவன் திரைப்படமும் தெலுங்கு மொழியில் நல்ல வரவேற்பை பெற்று ஹிட்டடித்தது.

Recommended Video

இந்த படத்துக்கு நான்தான் எடிட்டர் | Vijay Antony & Aathmika Exclusive|Kodiyil oruvan|Filmibeat Tamil
பட்டாம்பூச்சிக்கு கை கால் முளைத்த தேவதை நீங்க

பட்டாம்பூச்சிக்கு கை கால் முளைத்த தேவதை நீங்க

இந்த நிலையில் ஆத்மிகா வுக்கு தெலுங்கு பட உலகிலும் மார்க்கெட் உயர்ந்துள்ளது. முன்னணி நடிகைளுக்கு இணையாக கவர்ச்சியை காட்டி வரும் ஆத்மிகா இப்பொழுது ஜிம் உடையில் தரையில் உட்கார்ந்து கொண்டு க்யூட் போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பட்டாம்பூச்சிக்கு கை கால் முளைத்த தேவதை நீங்க என வர்ணித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X