செழித்த அழகில் சிவந்து நிற்கும் செந்தேனே... சேலையில் வருடும் ஆத்மிகா!

சென்னை: விஜய் ஆண்டனியின் மிரட்டலான நடிப்பில் சமீபத்தில் வெளியான கோடியில் ஒருவன் திரைப்படத்தில் மிகச்சிறப்பாக நடித்து பாராட்டுக்களைப் பெற்றவர் நடிகை ஆத்மிகா

கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள நரகாசூரன் என்ற படத்திலும் நடித்துள்ளார். ஆனால் இந்த திரைப்படம் இரண்டு ஆண்டுகளாக வெளியாகாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

நடிப்பு மட்டுமல்லாமல் கவர்ச்சியிலும் பட்டையை கிளப்பிகொண்டிருக்கும் ஆத்மிகா இப்பொழுது சேலையில் மனதை வருடும் அழகிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதை ஆர்ப்பரித்து உள்ளார்.

ஹிப்ஹாப் ஆதி இயக்கி

ஹிப்ஹாப் ஆதி இயக்கி

தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக கலக்கி கொண்டிருக்கும் நடிகை ஆத்மிகா இதுவரை விரல்விட்டு எண்ணக்கூடிய மிகக் குறைந்த அளவிலேயே திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ஒவ்வொரு கதையையும் பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் அந்த வகையில் ஹிப்ஹாப் ஆதி இயக்கி கதாநாயகனாக அறிமுகமான மீசைய முறுக்கு படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்

மிகப்பெரிய புகழை பெற்றார்

மிகப்பெரிய புகழை பெற்றார்

மீசைய முறுக்கு மிகப்பெரிய வெற்றிபெற்றது அதேபோல நடிகை ஆத்மிகாவும் இந்த படத்தின் மூலம் மிகப்பெரிய புகழை பெற்றார். தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவான நரகாசூரன் என்ற படத்திலும் ஒப்பந்தம் ஆனார். இந்த படம் அடுத்த கட்டப் பணிகளும் முடிந்து ரிலீசுக்கு தயாராக இருந்தும் இன்றுவரை பணப் பிரச்சினை காரணமாக வெளியிட முடியாமல் இருக்கிறது . அதேபோல இயக்குனர் டிகே இயக்கத்தில் விறுவிறுப்பான திரில்லர் கதை களத்தில் உருவாகியுள்ள காட்டேரி திரைப்படத்திலும் நடித்துள்ளார். இந்த படமும் இன்று வரை ரிலீசாகாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது

ரொமான்ஸ் காட்சிகளில் மிகச் சிறப்பாக

ரொமான்ஸ் காட்சிகளில் மிகச் சிறப்பாக

தனது ஒவ்வொரு படங்களையும் சொல்லி வைத்தது போல் ஹிட் படங்களாக கொடுத்து வரும் விஜய் ஆண்டனி கடைசியாக இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் வெளியான கோடியில் ஒருவன் என்ற படத்தில் நடித்திருந்தார். ஆக்சன் கதை களத்தில் உருவான இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. விஜய் ஆண்டனி, ஆத்மிகா முதல் முறையாக இப்படத்தில் இணைந்திருந்தாலும் ரொமான்ஸ் காட்சிகளில் மிகச் சிறப்பாக நடித்திருந்தனர். கோடியில் ஒருவன் வெற்றியை தொடர்ந்து ஆத்மிகாவும் அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார்.

Recommended Video

அப்பாவ ரொம்ப MISS பண்றேன் | ACTRESS AATHMIKA CHAT | FILMIBEAT TAMIL
சேலையில் மனதை வருடும்

சேலையில் மனதை வருடும்

இந்த நிலையில் இயக்குனர்கள் மு. மாறன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்கும் கண்ணை நம்பாதே என்ற படத்தில் ஆத்மிகா இப்போது நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு சென்னை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இவ்வாறு ஒவ்வொரு படங்களையும் பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து நடித்து வரும் ஆத்மிகா நடிப்புக்கு இணையாக கவர்ச்சியையும் காட்டுகிறார். அந்த வகையில் இப்பொழுது சேலையில் மனதை வருடும் அழகிய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் செழித்த அழகில் சிவந்து நிற்கும் செந்தேனே என வைரமுத்துவின் ஸ்டைலில் வர்ணித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X