ஆத்மிகாவை சூழ்ந்த குட்டி ரசிகைகள்.. க்யூட் ஃபேன்ஸ்!

சென்னை: நடிகை ஆத்மிகா ஹிப் ஹாப் தமிழா ஆதி ஹீரோவாக அறிமுகமான மீசைய முறுக்கு படத்தில் நடித்து அறிமுகமானார்

அதைத்தொடர்ந்து நரகாசுரன், காட்டேரி மற்றும் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற கோடியில் ஒருவன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்

இப்போது உதயநிதி ஸ்டாலினின் கண்ணை நம்பாதே படத்தில் நடித்து வரும் ஆத்மிகாவை திடீரென படப்பிடிப்பு தளத்தில் குட்டி ரசிகைகள் சூழ்ந்த அழகிய புகைப்படங்களை இப்பொழுது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

ஹீரோவாக பரிமாணம்

ஹீரோவாக பரிமாணம்

தமிழ் சினிமாவிற்கு துள்ளலான ஹிப்ஹாப் இசையை கொடுத்து இசையமைப்பாளராக அறிமுகமான ஹிப்ஹாப் ஆதி இப்பொழுது ஹீரோவாக பல படங்களில் நடித்து வருகிறார் அந்த வகையில் இசையமைப்பாளராக இருந்து ஹீரோவாக பரிமாணம் பெற்ற மீசையமுறுக்கு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை ஆத்மிகா. மீசைய முறுக்கு படத்தில் கதாநாயகியாக நடித்ததை

தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கத்தில் நரகாசுரன் என்ற படத்தில் நடித்தார்

திரில்லர் கதை களத்தில்

திரில்லர் கதை களத்தில்

இப்படம் கார்த்திக் நரேனின் முந்தைய படமான துருவங்கள் பதினாறு போலவே திரில்லர் கதை களத்தில் உருவானது இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் தயாரிப்பில் உருவாகி வந்த நரகாசுரன் சில பிரச்சனைகள் காரணமாக ரிலீஸ் ஆவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது இன்று வரை இந்த படம் வெளியாகாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது நரகாசுரன் நேரடியாக ஓடிடியில் வெளியாகும் சில தகவல்கள் வெளிவந்துள்ளது. இதில் ஸ்ரேயா மற்றும் ஆத்மிகா என இரண்டு ஹீரோயின்கள் அடைத்துள்ளனர்.

விஜய் ஆண்டனியுடன் ரொமான்ஸ்

விஜய் ஆண்டனியுடன் ரொமான்ஸ்

அலட்டிக்கொள்ளாத நடிப்பின் மூலம் தனது ஒவ்வொரு படங்களிலும் சொல்லி அடித்தது போல ஹிட்டுகளை கொடுத்து வரும் நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படம் கோடியில் ஒருவன். இயக்குனர் ஆனந்தகிருஷ்ணன் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் கதாநாயகியாக ஆத்மிகா நடித்திருப்பார் ஆத்மிகா மற்றும் விஜய் ஆண்டனி முதல் முறையாக இந்த படத்தில் இணைந்து நடித்து இருந்தாலும் இவர்களது கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது.

Recommended Video

அப்பாவ ரொம்ப MISS பண்றேன் | ACTRESS AATHMIKA CHAT | FILMIBEAT TAMIL
தீவிர குட்டி ரசிகை

தீவிர குட்டி ரசிகை

இவ்வாறு தமிழ் சினிமாவின் மிகப் பிரபலமான நடிகையாக அடுத்தடுத்து படங்களில் நடித்து வரும் ஆத்மிகா இப்பொழுது உதயநிதி ஸ்டாலினின் கண்ணை நம்பாதே படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குனர் மு மாறன் இயக்கி வர படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று கொண்டுள்ளது. ஆத்மிகா வுக்கு இளம் ரசிகர்கள் அதிகளவில் இருப்பது பலரும் அறிந்ததே. ஆனால் இவருக்கு பல குட்டி ரசிகைகள் இருப்பது இப்போதுதான் தெரிய வந்துள்ளது. ஆத்மிகா படப்பிடிப்பு தளத்தில் இருந்தபொழுது குட்டி ரசிகை ஒருவr ஆத்மிகா இடம் போட்டோ எடுக்க கேட்டுள்ளார் ஆத்மிக்குவும் அனுமதித்த பிறகு அவரது நண்பர்களையும் குடும்பத்தினரையும் அழைத்து ஒன்றாக எடுத்த அந்த தீவிர குட்டி ரசிகையின் புகைப்படங்களை ஆத்மிகா இப்பொழுது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X