இது உணர்ச்சிகரமான தருணம்… வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை… ஆத்மிகா நெகிழ்ச்சி !
சென்னை : கோடியில் ஒருவன் திரைப்படத்தை நடிகை ஆத்மிகா குழந்தைகளுடன் குழந்தையாக திரையரங்கில் பார்த்து ரசித்தார்.
Recommended Video
கோடியில் ஒருவன் திரைப்படம் செப்டம்பர் 17ந் தேதி திரையரங்கில் வெளியாகி அனைவரின் பாராட்டையும் பெற்று வருகிறது.
இப்படத்தின் ஆத்மிகா விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

கோடியில் ஒருவன்
ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'கோடியில் ஒருவன்'. இந்தப் படத்துக்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கரோனா இரண்டாம் அலை அச்சுறுத்தலுக்குப் பிறகு மக்கள் அதிக அளவில் திரையரங்குகளுக்கு வந்த படம் 'கோடியில் ஒருவன்' என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ரசிகர்களிடைய வரவேற்பு
தனக்குப் பொருந்தும் கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடிப்பதில் கெட்டிக்காரரான விஜய் ஆண்டனி ஒரு டியூஷன் மாஸ்டராக நடித்துள்ளார். இந்த படத்தில் விஜய் ஆண்டனி அதிரடி ஆக்ஷன் அதிரடியாக தனக்கே உரிய பாணியில் நடித்திருக்கிறார். மேலும், இந்த படத்தில் கே.ஜி.எஃப் பட புகழ் கருடா ராமசந்திர ராஜு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

குழந்தைகளுடன் குழந்தையாக
இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்த ஆத்மிகா, குழந்தைகளுடன் இணைந்து திரைப்படத்தை திரையரங்கில் பார்த்தார். அந்த குழந்தைகள் ஆத்மிகாவை கரடி பொம்மை கொடுத்து வரவேற்றனர். மேலும், குழந்தைகளுடன் எடுத்துக்கொண்ட வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஆத்மிகா, AllTheChildrenTrustKids குழந்தைகளுடன் இணைந்து கோடியில் ஒருவன் பார்ப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அவர்கள் திரைப்படத்தை மிகவும் ரசித்தார்கள். இது உண்மையில் என் வாழ்க்கையில் ஒரு உணர்ச்சிகரமான தருணம். இதை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.

கண்ணை நம்பாதே
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசையை முறுக்கு படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் ஆத்மிகா. அதன் பின்னர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நரகாசுரன் படத்தில் நடித்தார். சில காரணங்களால் அந்த படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. தற்போது ஆத்மிகாவின் கைவசம் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக கண்ணை நம்பாதே படத்தில் கமிட்டாகியுள்ளார்.


Click it and Unblock the Notifications











