ஆர்யாவை மறக்காத அபர்ணதி.. இன்ஸ்டாகிராம் கணக்கைகூட மாத்தல.. ஆனால், சேர்ந்து நடிக்க மாட்டேன்!

சென்னை: கலர் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எங்கள் வீட்டு மாப்பிள்ளை என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில், ஆர்யாவிற்கு பெண் பார்க்கும் நிகழ்ச்சி நடந்தது. அதில், பல பெண்கள் கலந்து கொண்ட போதும், அபர்ணதி ஆர்யாவை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என ஆசைபட்டார். ஆனால், அந்த ஆசை நிறைவேறவில்லை. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட யாரையும் ஆரியா திருமணம் செய் கொள்ளாமல், நடிகை சாயிஷாவை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.

எங்கள் வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி மூலம் பிரபலமான அபர்ணதி ஜிவி பிரகாஷூடன் ஜெயில் படத்தில் நடித்தார். அந்தபடத்தை தொடர்ந்து இறுகபற்று, தேன் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது இவர், அறிமுக இயக்குநர் ராகுல் அசோக் இயக்கத்தில், 'வெஞ்சென்ஸ்' படத்தில் நடித்துள்ளார். இப்படம் பிப்ரவரி 27ந் தேதி வெளியாக இருக்கும் நிலையில் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசி உள்ளார்.

Abarnathi Arya
Photo Credit:

நடிகை அபர்ணதி: அதில், ஜெயில் படத்தில் ரௌடி பெண்ணாக நடித்துவிட்டு,தேன், இறுகபற்று படத்தில் ஒரு அமைதியான பெண்ணாக நடித்தேன். இறுகப்பற்று படத்திற்காக சற்று உடல் எடை அதிகரித்து இருப்பேன். மறுபடியும் இந்த திரைப்படத்திற்காக உடல் எடையை குறைத்தேன். இந்த திரைப்படத்தில் ஒரு போல்டான கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறேன். படம் முழுக்க என்னுடைய கதாபாத்திரம் தான் வரும். நான் வராத காட்சிகளில் கூட என்னை பற்றி தான் படத்தில் பேசுவார்கள் என்பதால் எனக்கு இந்த படம் மிகவும் பிடித்திருந்தது. இந்த படத்தை என்னை தவிர வேறு யார் நடித்தாலும் நிச்சயம் வெற்றி பெறும். கதையை சொன்னதை விட 100 மடங்கு படத்தை அழகாக எடுத்து இருக்கிறார் இயக்குனர் என்றார்.

மறக்கவே இல்லை: தொடர்ந்து ஆர்யாவுடன் சேர்ந்து நடிப்பீர்களா? என்ற கேள்விக்கு பதில் அளித்த அபர்ணதி. ஆர்யாவுடன் ரியாலிட்டி ஷோவில் 100 நாட்கள் சேர்ந்து நான் பயணித்து இருக்கிறேன். அது ஒரு நல்ல மெமரீ. ஆனால், சினிமாவில் அவருடன் இணைந்து நடிக்க வேண்டும் என்றால் அது ஒரு போலியான ரொமான்ஸ் ஆக தான் இருக்கும். அது மட்டுமல்லாமல் அவருக்கு தங்கை கதாபாத்திரத்தில் என்னை நடிக்க அழைக்கிறார்கள். இந்த காரணத்தினால் தான், ஆர்யாவுடன் சேர்ந்து நடிக்க கொஞ்சம் கூட விரும்பவில்லை இல்லை என்று கூறியிருக்கிறார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்பொழுதும் கூட ஆர்யாவின் பெயரை மாற்றாமலே வைத்து இருக்கிறார். இப்போதும் அபர்ணதி ஆர்யாவையும் மறக்கவே இல்லை என்பதற்கு இது ஒரு உதாரணம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X