சிம்புவை போன்று டாக்டர் பட்டம் பெற்ற நடிகை... குஷியில் புகைப்படம் பகிர்வு

சென்னை : பிக் பாஸ் சீசன் 3 மூலம் சிறப்பான வரவேற்பை பெற்றவர் நடிகை அபிராமி.

இவர் நடிகையாக மட்டுமின்றி சிறந்த பரதநாட்டிய கலைஞராகவும் விளங்கி வருகிறார்.

இந்நிலையில் நடிகை அபிராமிக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சி

பிக் பாஸ் நிகழ்ச்சி

விஜய் டிவியில் சிறப்பான நிகழ்ச்சியாக விளங்கி வருகிறது பிக் பாஸ். தற்போது இதன் 5வது சீசன் நடைபெற்று வருகிறது. இந்த சீசன் மிகவும் சிறப்பாக அமைந்துள்ள நிலையில், தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த சீசனை போலவே முந்தைய சீசன்களும் ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றன.

வெற்றி பெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சி

வெற்றி பெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சி

இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு காரணம், அதில் காணப்படும் எமோஷன்கள், காதல், சண்டைகள் உள்ளிட்டவையே. மற்ற நிகழ்ச்சிகளை போலவே இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பல போட்டியாளர்கள் பெரிய திரையிலும் வாய்ப்புகளை பெற்று வருகின்றனர்.

நடிகை அபிராமிக்கு டாக்டர் பட்டம்

நடிகை அபிராமிக்கு டாக்டர் பட்டம்

பிக் பாஸ் சீசன் 3 மூலம் தனக்காக ரசிகர்களை ஏராளமாக பெற்ற போட்டியாளர்களின் நடிகை அபிராமியும் ஒருவர். இவர் ஒரு பரதநாட்டிய கலைஞராகவும் உள்ளார். இந்நிலையில் பரதநாட்டியத்தில் சிறப்பாக விளங்கியதற்காக அபிராமிக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

புகைப்படம் வெளியீடு

புகைப்படம் வெளியீடு

செயின்ட் மதர் தெரசா பல்கலைகழகத்தின் சார்பில் அபிராமிக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தனது பட்டத்துடன் தன்னுடைய அம்மாவுடன் புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதற்கு ஏராளமான லைக்ஸ்கள் கிடைத்துள்ளன.

Recommended Video

Silambharasan கெளரவ டாக்டர் பட்டம் எதற்காக கொடுக்கப்பட்டது | Filmibeat Tamil
சிம்புவிற்கு டாக்டர் பட்டம்

சிம்புவிற்கு டாக்டர் பட்டம்

சமீபத்தில் கலைத்துறையில் செய்த சாதனையை பாராட்டி நடிகர் சிம்புவிற்கு வேல்ஸ் பல்கலைகழகம் டாக்டர் பட்டத்தை வழங்கியுள்ளது. இதேபோல தற்போது நடிகையும் பரதநாட்டிய கலைஞருமான அபிராமிக்கும் டாக்டர் பட்டம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X