Actress Abhirami: மணிரத்னத்திடம் தேங்க்ஸ் சொன்ன நடிகை அபிராமி.. எதுக்காக தெரியுமா?
சென்னை: நடிகை அபிராமி நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தவர். விருமாண்டி படத்தில் கமல்ஹாசனுடன் மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் அபிராமி. இடையில் சிறிது காலங்கள் படங்களில் நடிக்காமல் விலகியிருந்த அபிராமி, தற்போது மீண்டும் தமிழ் படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.
விஜய் சேதுபதியுடன் அபிராமி நடித்துள்ள மகாராஜா படம் கடந்த 14ஆம் தேதி ரிலீஸ் ஆகி ரசிகர்களை கவர்ந்துள்ளது இந்நிலையில் அடுத்ததாக கமல்ஹாசன் உடன் தக்கலைப் படத்தில் இணைந்து அபிராமி நடித்து வருகிறார் இந்த படம் குறித்தும் கமல்ஹாசன் உடன் தான் நடித்த முதல் காட்சி குறித்தும் அவர் பல்வேறு சுவாரசியங்களை பகிர்ந்து உள்ளார்

நடிகை அபிராமி: நடிகர் கமல்ஹாசன், சிம்பு, அபிராமி, நாசர், வையாபுரி உள்ளிட்ட நடிகர்கள் நடித்து வரும் படம் தக் லைஃப். சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் படத்தின் சூட்டிங் நடந்து முடிந்துள்ள சூழலில் அடுத்ததாக கேரளாவில் இந்த படத்தின் சூட்டிங் நடக்கவுள்ளது. விருமாண்டி படத்தை தொடர்ந்து தற்போது மீண்டும் கமல்ஹாசனுடன் தக் லைஃப் படத்தில் இணைந்து நடிகை அபிராமி நடித்து வருகிறார். அபிராமி நடிப்பில் கடந்த 14ம் தேதி வெளியான மகாராஜா படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று வருகிறது. இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நட்டி நட்ராஜ் உள்ளிட்டவர்களுடன் இணைந்து நடித்துள்ளார் அபிராமி.
மீண்டும் கமலுடன் இணைந்த அபிராமி: நீண்ட காலங்களாக சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த அபிராமி தற்போது அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். இந்நிலையில் மகாராஜா படத்திற்காக அடுத்தடுத்த பிரமோஷன்களில் ஈடுபட்ட நடிகை அபிராமி கமல்ஹாசனுடன் நடித்து வரும் தக் லைஃப் படம் குறித்தும் தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். விருமாண்டி படத்திலும் தனக்கும் கமல்ஹாசனுக்கும் இடையிலான முதல் காட்சியில் தங்களை சுற்றி அதிகமான மாடுகள் இருந்ததாகவும் தற்போது தக் லைஃப் படத்திலும் அதேபோல தங்கள் இருவரின் காம்பினேஷன் காட்சியில் மாடுகள் சுற்றிலும் அதிகமாக இருந்ததாகவும் நடிகை அபிராமி தெரிவித்துள்ளார்.
பட்டர்பிளை பறந்த தருணம்: இது குறித்து தான் கமல்ஹாசனிடம் கூறிய போது அவர் சிரித்ததாக அபிராமி வெளிப்படுத்தியுள்ளார். நீண்ட காலங்களுக்கு பிறகு நடிப்பதால் தன்னை சுற்றிலும் நடிகர் கமல்ஹாசன், மணிரத்னம் மற்றும் சில முன்னணி நடிகர்கள் இருந்ததால் தனக்கு பதற்றம் காணப்பட்டதாக அபிராமி தெரிவித்துள்ளார். தன்னுடைய மனதிற்குள் பட்டர்பிளை பிறந்ததாகவும் ஆனால் அந்த தருணத்தை தான் ரசித்ததாகவும் நடிகை அபிராமி மேலும் கூறியுள்ளார். இந்நிலையில் இதுகுறித்து மணிரத்னத்திடம் சென்று தனக்கு நீண்ட காலங்களுக்குப் பிறகு டயலாக் மறந்து போகும் சந்தர்ப்பங்கள் உள்ளிட்டவற்றை தந்ததாகவும் பட்டர்பிளை பறக்கும் தருணத்தை தான் என்ஜாய் செய்ததையும் கூறி அவருக்கு இந்த தருணத்தை கொடுத்ததற்காக தான் நன்றி தெரிவித்ததாகவும் அபிராமி தன்னுடைய பேட்டியில் மேலும் தெரிவித்துள்ளார்.
அபிராமி பேட்டி: அவரது இந்த பேட்டி அதிகமான சுவாரசியங்களுடன் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்திருந்தது. நீண்ட காலங்களுக்குப் பிறகு தமிழில் மீண்டும் தன்னுடைய ரீ-என்ட்ரியை நடிகை அபிராமி துவங்கியுள்ளார். சமீபத்தில் வெளியான மகாராஜா படத்தின் ப்ரோமோஷன்களுக்காக அவர் விஜய் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்றதுடன் பல பேட்டிகளையும் அடுத்தடுத்து கொடுத்திருந்தார். படத்தின் ட்ரெயிலர் ரிலீஸ் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளிலும் ரசிகர்களை கவரும் வகையில் அபிராமி பங்கேற்றதை பார்க்க முடிந்தது. அவர் தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு வலம் வருவார் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











