முன்னாள் காதலருக்கு முத்தம் கொடுத்தாரா நடிகை அபிராமி? அவரே சொன்ன பதிலை பாருங்க
சென்னை : நடிகை அபிராமி விருமாண்டி படம் மூலம் சிறப்பான நடிகையாக வலம் வந்தவர்.
தொடர்ந்து நடிகை ஜோதிகாவின் 36 வயதினிலே படத்தில் ரீ என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து சமூக வலைதளங்களில் பிசியாக காணப்படுகிறார்.
தற்போது இன்ஸ்டாகிராமில் ஒரு வார்த்தையில் பதிலளிக்கும் கேள்விகளுக்கு அவர் அளித்துள்ள பதில் வைரலாகி வருகிறது.

நடிகை அபிராமி
நடிகை அபிராமி கமலுடன் விருமாண்டி படத்தில் இணைந்து நடித்திருந்தார். அந்தப் படம் கமல் ரசிகர்களிடையே மட்டுமின்றி அனைத்து தரப்பினரிடமும் சிறப்பான விமர்சனங்களுக்கு உள்ளானது. ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

கமலுடன் ஜோடி
அந்தப் படத்தில் கமலுடன் ஜோடி சேர்ந்திருந்தார் நடிகை அபிராமி. இவர்களுக்கிடையிலான கெமிஸ்ட்ரி படத்தில் பேசப்பட்டது. தொடர்ந்து சில படங்களில் நடித்த அபிராமிக்கு போதிய சினிமா வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதையடுத்து அவர் வெளிநாட்டு தொழிலதிபரை திருமணம் செய்துக் கொண்டு செட்டில் ஆனார்.

36 வயதினிலே படத்தில் என்ட்ரி
தொடர்ந்து ஜோதிகாவின் 36 வயதினிலே படத்தில் ரீ என்ட்ரி கொடுத்தார். அதில் மனமுடைந்து காணப்படும் ஜோதிகாவிற்கு தன்னம்பிக்கை கொடுக்கும் வகையில் இவரது என்ட்ரி இருக்கும். தொடர்ந்து ஜோதிகா தன்னுடைய பாதையை சிறப்பாக வடிவமைத்துக் கொள்ளும் வகையில் கதை நகரும்.

கவனத்தை பெற்ற கேரக்டர்
அபிராமியின் இந்த கேரக்டர் பரவலாக ரசிகர்களின் கவனத்தை பெற்றது. தொடர்ந்து சமூகவலைதளங்களில் அதிகமான பாலோயர்களை அவர் பெற்றார். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் நடத்தப்பட்ட கேள்விகளுக்கு ஒரே வார்த்தையில் பதிலளிக்கும் போட்டியில் கலந்து கொண்டார் அபிராமி.

முன்னாள் காதலருக்கு முத்தம்?
அதில் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்ட நிலையில் பிரிந்த பின்பு முன்னாள் காதலருக்கு முத்தம் கொடுத்துள்ளீர்களா என்று கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு கோபம் கொள்ளவில்லை. மாறாக இதை எளிதாக எடுத்துக் கொண்டு இல்லை என்று வெட்கத்துடன் பதிலளித்திருந்தார்.

பல்வேறு கேள்விகளுக்கு பதில்
மேலும் பாத்ரூமில் வழுக்கி விழுந்துள்ளீர்களா, ஆன்லைன் நண்பரை நேரில் பார்த்துள்ளீர்களா, கூட பணிபுரிபவருக்கு முத்தம் கொடுத்துள்ளீர்களா உள்ளிட்ட பல கேள்விகள் கேட்கப்பட்ட நிலையில் எதற்கும் சிறிதும் கோபப்படாமல் சிரித்துக் கொண்டே அவர் அளித்துள்ள பதில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











