எனக்கு யாரும் பாடம் எடுக்காதீங்க.. நடராஜர் திருவுருவத்தை முதுகில் பச்சை குத்திய அபிராமி!
சென்னை : நடிகை அபிராமி நாடராஜர் திருவுருவ டாட்டூவை முதுகில் பச்சை குத்தி உள்ள போட்டோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
மாடல் அழகியான ஏராளமான விளம்பர படங்களில் நடித்துள்ளார். மேலும் நடிகர் அஜித்துடன் நேர்கொண்ட பார்வை படத்திலும் நடித்துள்ளார்.
அந்த படத்தில் அவரது கதாப்பாத்திரமும் நடிப்பும் பெரிதும் பேசப்பட்டது. ஆனால் அந்த படத்திற்கு முன்பே அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் பிக்பாஸ் அபிராமி என்று அழைக்கப்பட்டு வருகிறார்.

நடிகை அபிராமி
நடிகை அபிராமி கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3ல் 17 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார். மாடல் அழகியான இவர், சக போட்டியாளரான கவினை காதலித்தார். ஆனால் அபிராமியின் காதலை அவர் ஏற்க மறுத்த கவின், லாஸ்லியாவின் பின்னால் சுற்றிக் கொண்டு இருந்தார்.

முகெனை காதலித்தார்
இதனால் ஆத்திரமடைந்த அபிராமி கவினை கடுப்பாக்குவதற்காக முகென் ராவிடம் நெருங்கி பழகினார். பின் முகெனை காதலிப்பதாகவும் கூறினார். ஆனால் முகெனோ அபிராமி எனக்கு நல்ல ஃபிரென்ட் என்றும் தனக்கு வெளியில் வேறு காதலி இருப்பதாகவும் கூறினார். முகென் அபிராமியிடம் இருந்து விலகி செல்ல, அபிராமியோ தொடர்ந்து காதலித்துக்கொண்டே இருப்பேன் என்று வம்பு இழுத்தார். இதனால், பிக் பாஸ் வீட்டில் கலவரமே வெடித்தார்.

லியோ படத்தில்
இதையடுத்து அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். அதன்பின் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடினார் ஆனால் வெற்றிப்பெறவில்லை. தற்போது அபிராமி, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் திரிஷா நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தில் கமிட்டாகி இருப்பதாக கூறப்படுகிறது. அண்மையில் லோகேஷ் கனகராஜூடன் இருக்கும் போட்டோவை அபிராமி ஷேர் செய்திருந்தார்.

எனக்கு யாரும் பாடம் எடுக்காதீங்க
இந்நிலையில், நடிகை அபிராமி நடராஜரின் திரு உருவத்தை தனது முதுகில் பச்சை குத்தி உள்ளார். மேலும், நடராஜரின் டாட்டூ தெரியும்படி முதுகை மொத்தமாக காட்டும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். மேலும், பக்தியைப் பற்றி எனக்கு யாரும் கற்றுத்தர தேவை இல்லை என்றும், அது என்னுடைய தனிப்பட்ட விஷம், என் சிவனை நான் எங்கு வேண்டுமானாலும் வைத்துக்கொள்வேன் என்று விளக்கமும் கொடுத்துள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் அவரை கண்டபடி திட்டிவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











