ஸ்வேதாவை மீட் பண்ண தயாரா.. ரஜினிகாந்தின் வேட்டையன் படத்தில் அபிராமி கேரக்டரை வெளிப்படுத்திய டீம்!

சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் படம் அனைத்து தரப்பினரையும் மிரட்டவும் கொண்டாட வைக்கவும் தயாராகியுள்ளது. இன்னும் இரு வாரங்கள் இந்தப் படத்தை பார்ப்பதற்காக காத்திருக்க முடியவில்லை என்றும் வேட்டையனின் ஆட்டத்தை பார்க்க ஆர்வமாக உள்ளதாகவும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

ஜெய் பீம் படத்திற்கு பிறகு இந்தப் படத்தை டிஜே ஞானவேல் இயக்கியுள்ளார். தனக்காக ரஜினியோ, ரஜினிக்காக தானோ சமரசம் செய்துக் கொள்ளாமல், ரசிகர்களை கருத்தில் கொண்டு, ரஜினியின் இமேஜ் பாதிக்காதவண்ணம் இந்தப் படத்தை இயக்கியுள்ளதாக டிஜே ஞானவேல் பிரபல வாரயிதழுக்கு கொடுத்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.

rajinikanth vettaiyan movie abhirami

வேட்டையன் படம்: நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் படம் அவரது 170வது படமாக உருவாகியுள்ளது. இந்தப் படத்தை ஜெய் பீம் என்ற மிகப்பெரிய கருத்தை வெளிப்படுத்திய படத்தை கொடுத்த டிஜே ஞானவேல் இயக்கியுள்ளார். முன்னதாக இவரிடம் கதைக்கேட்டபோதே, தனக்கு கருத்து சொல்லும் படங்கள் சரிவராது என்றும் அவர் சொன்ன கதையையே கமர்ஷியலாக கொடுக்க முடியுமா என தான் கேட்டதாகவும் அதை ஞானவேல் சிறப்பாக செய்து முடித்துள்ளதாகவும் படத்தின் இசை வெளியீட்டின்போதே ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டின்போதே படத்தின் டீசரும் வெளியாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

நடிகர் ரஜினிகாந்த்: இந்தப் படத்தில் எஸ்பியாக என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார். இதை தற்போது படத்தின் இயக்குநர் ஞானவேலுவும் தன்னுடைய பேட்டியொன்றில் உறுதிப்படுத்தியுள்ளார். அவர் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக மாறியதற்கான காரணமும் படத்தில் வலுவாக அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்தப் படத்திற்காக தான் அதிகமான காம்ப்ரமைஸ் செய்துக் கொள்ளவில்லை என்றும் அதேபோல நடிகர் ரஜினிகாந்தும் தன்னுடைய இமேஜிலிருந்து சமரசம செய்துக் கொள்ளாதபடி பார்த்துக் கொண்டதாகவும் டிஜே ஞானவேல் தெரிவித்துள்ளார்.

நடிகை அபிராமி: இந்தப் படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து அமிதாப்பச்சன், மஞ்சு வாரியர், பகத் ஃபாசில், ராணா, ரித்திகா சிங், அபிராமி உள்ளிட்டவர்கள் முன்னணி கேரக்டர்களில் நடித்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த படத்தின் இசை வெளியீட்டில் அமிதாப் தவிர்த்து மற்ற நடிகர், நடிகைகள் கலந்துக் கொண்டு படம் குறித்த சுவாரஸ்யங்களை பகிர்ந்துக் கொண்டனர். இதனிடையே, தனித்தனியாகவும் படத்தின் பிரமோஷனுக்காக அடுத்தடுத்த பேட்டிகளையும் அவர்கள் கொடுத்துள்ளனர். இதனிடையே படத்தில் நடிகை அபிராமியும் சிறப்பான கேரக்டரில் நடித்துள்ளதாக பேட்டியொன்றில் கூறியிருநதார்.

அபிராமியின் கேரக்டர் வீடியோ: இந்த கேரக்டருக்காக தன்னை ரஜினிகாந்த் தேர்வு செய்ததாகவும் மகிழ்ச்சியுடன் அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது படத்தில் அபிராமியின் ஸ்வேதா கேரக்டர் குறித்த வீடியோவை லைகா நிறுவனம் தற்போது தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இந்தப் படத்தில் மிகவும் ஃபவர்புல்லான கேரக்டரில் அபிராமி நடித்துள்ளதையும் உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட மொழிகளில் பான் இந்தியா படமாக ரிலீசாகவுள்ளது குறித்தும் மகழ்ச்சி தெரிவித்துள்ளது. இந்தப் படத்தின் அடுத்தடுத்த கேரக்டர்களை லைகா நிறுவனம் கடந்த சில தினங்களாக வெளிப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

rajinikanth vettaiyan movie abhirami

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X