நடிகை அபினிதா காதலனுடன் சென்று விட்டார் - கடத்தல் பரபரப்புக்கு போலீஸ் முற்றுப்புள்ளி

சென்னை: நடிகை அபினிதா கடத்தப்படவில்லை. விருப்பப்பட்டு காதலனுடன் சென்றிருந்தவர் தற்போது வீடு திரும்பி விட்டார் என சென்னை போலீசார் தெரிவித்துள்ளனர்.

கற்பவை கற்றபின் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளவர் அபினிதா. இது தவிர 10க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் அவர் நடித்துள்ளார். சென்னை வளசரவாக்கம் பழனியப்பா நகர் கோதாவரி தெருவில் வசித்து வரும் அபினிதா, கடத்தப்பட்டு விட்டதாக நேற்று தகவல் பரவியது. வாட்ஸ் அப்பிலும் அபினிதா புகைப்படத்துடன் கடத்தப்பட்டு விட்டதாக செய்தி வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு வளசரவாக்கம் போலீசார் விளக்கம் அளித்தனர். அதில் அபினிதா கடத்தப்படவில்லை என அவர்கள் தெரிவித்தனர்.

மேலும், இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது :-

புகார்...

புகார்...

கடத்தப்பட்டதாக கூறப்படும் நடிகையின் தாய் கற்பகம், சில நாட்களுக்கு முன்னர் வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் வந்து புகார் செய்தார். அதில், தனது மகள் நடிகை அபினிதாவை காணவில்லை என்று கூறியிருந்தார்.

காதலனுடன் ஓட்டம்...

காதலனுடன் ஓட்டம்...

இதுபற்றி நாங்கள் விசாரணை நடத்தி அபினிதாவை தேடினோம். அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் தனது காதலனுடன் ஓடியிருப்பது தெரியவந்தது.

2 நாட்களுக்குப் பின்...

2 நாட்களுக்குப் பின்...

அபினிதாவின் தாய் புகார் கொடுத்து 2 நாட்கள் கழித்த பின்னர், தனது காதலன் மகேசுடன் அவராகவே போலீஸ் நிலையத்துக்கு வந்துவிட்டார்.

காதல் திருமணம்...

காதல் திருமணம்...

என்னை காணவில்லை என்று எனது தாய் புகார் செய்திருப்பதாக அறிந்தேன். நான் எனது காதலனை திருமணம் செய்து கொண்டு பட்டுக்கோட்டையில் இருக்கிறேன் என்று அபினிதா எழுதிக் கொடுத்துவிட்டு சென்றுவிட்டார்.

தவறான தகவல்...

தவறான தகவல்...

அவரை யாரும் கடத்த வில்லை. அது போன்ற ஒரு தகவலை யாரோ பரப்பி விட்டுள்ளனர்' என இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். போலீசாரின் உரிய விளக்கத்திற்குப் பின்னர் நடிகை கடத்தப்பட்டதாக நிலவிய பரபரப்பு முடிவிற்கு வந்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X