'வாங்க, உட்காருங்க, ஜாலியான காமெடி இருந்தா சொல்லுங்க..' அப்படி இப்படி படுத்தபடி கேட்கும் ஹீரோயின்!

By

சென்னை: பிரபல நடிகை அப்படி இப்படி படுத்தபடி வெளியிட்டுள்ள கிளாமர் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

Recommended Video

Reshma Pasupuleti Stunning dance moves, Star Sunita, Preethi sharma | Lock down Diaries

கொரோனா லாக்டவுனுக்குப் பிறகு சமூக வலைத்தளங்களை, தங்களது செல்லப் பிள்ளைப் போல கவனித்து வருகிறார்கள் பல ஹீரோயின்ஸ்!

ஒரு நாள் கூட, அதைக் கவனிக்காமல் காலம் தள்ள முடியாத நிலைக்கு வந்துவிட்டார்கள், பலர்.

ஜாலி, கேலி பார்ட்டி

ஜாலி, கேலி பார்ட்டி

அவர்களுக்கும் பொழுதுபோக வேண்டுமே! எத்தனை நேரம்தான் டிவியையும் சினிமாவையும் வீட்டு வேலைகளையும் பார்த்துக்கொண்டிருப்பது. அப்படி சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ஒருவர், அடா சர்மா. மற்ற நடிகைகள் போட்டோக்களை மட்டும் பகிர்ந்தால், இவர் கொஞ்சம் ஜாலி, கேலி பார்ட்டி. ஃபன் விஷயங்கள் இவர் பக்கத்தில் பரவி இருக்கிறது.

கிளாமர் போட்டோஸ்

கிளாமர் போட்டோஸ்

ரசிகர்கள் கேட்கும் சில கேள்விகளுக்கு நிச்சயம் பதிலளிக்கிறார், அடா சர்மா. சில ஏடா கூட கேள்விகளுக்கும் ஜாலியான பதிலளிப்பதில் அடா, அடடா! இதனால்தானோ என்னவோ, ரசிகர்கள் அதிகமாக அவரை பின் தொடர்கிறார்கள். கிளாமர் போட்டோஸ் மற்றும் வீடியோக்களைப் அவ்வப்போது பதிவிட்டு வைரலாக்கும் அடா, சில நேரம் கேப்ஷன்களிலும் மிரட்டுவார்.

மேன் டு மேன்

மேன் டு மேன்

நடிகை அடா சர்மா தமிழில், சிம்பு நடித்த 'இது நம்ம ஆளு' படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார். சார்லி சாப்ளின் 2 படத்திலும் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இந்தியில் 1920, பிர், கமாண்டோ 2, கமாண்டோ 3 உட்பட சில படங்களில் நடித்துள்ளார். இப்போது, மேன் டு மேன் என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இதில் ஆண் தோற்றத்தில் நடிக்கிறார் அவர்.

காமெடி இருந்தால்

காமெடி இருந்தால்

இப்போது அடா வெளியிட்டுள்ள கிளாமர் போட்டோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. கால்கள் தெரிய ஜாலியாக சாய்ந்து படுத்தவாறு எடுத்திருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ள அவர், அதற்கு கேப்ஷனாக, 'வாங்க, உட்காருங்க, உங்களுக்குத் தெரிஞ்ச ஜாலியான காமெடி இருந்தா சொல்லுங்க' என்று குறிப்பிட்டிருக்கிறார். இதற்கு பலர் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

ஏன் வெறுக்கறீங்க?

ஏன் வெறுக்கறீங்க?

'எனக்கு மட்டும் நீங்க ஏன் பதில் போடவே மாட்டேங்கிறீங்க? நீங்க எப்ப பதில் போடூவிங்கன்னு எதிர்பார்த்துட்டு இருக்கேன். ஏன் என்னை மட்டும் வெறுக்கறீங்க? நீங்க எனக்கு பதில் எழுத, நான் என்ன செய்யணும்?' என்று ஏக்கமாகக் கேட்டிருக்கிறார் ஒரு நெட்டிசன். இன்னொருவர், இப்பதான் ஓவன்ல இருந்து வெளியே வந்தீங்களா? இவ்வளவு ஹாட்டா இருக்கீங்களே என்று கலாய்த்துள்ளார்.

ஒழுங்கா உட்காருங்க

ஒழுங்கா உட்காருங்க

இதற்கிடையே சில ரசிகர்கள், 'கெமிஸ்ட்ரி சாருக்கும் பிசிக்ஸ் மிஸ்சுக்கும் ஏன் பிரேக் அப் ஆச்சுன்னு தெரியுமா? ரெண்டு பேருக்கும் கெமிஸ்ட்ரி சரியில்லை' என்பது போன்ற கடி ஜோக்குகளையும் பதிவிட்டுள்ளனர். ஒரு நெட்டிசன், முதல்ல நீங்க ஒழுங்கா உட்காருங்க, இப்படி படுத்துக்கிட்டா, காமெடியை கேட்கிறது? என்று கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X