உங்களால இப்படி பண்ண முடியுமா? பெட்ரூமில் அப்படி படுத்தபடி ரசிகர்களுக்கு சவால் விட்ட பிரபல நடிகை!

By

சென்னை: பிரபல நடிகை பெட்ரூமில் அமர்ந்தபடி வெளியிட்டுள்ள கிளாமர் சவால் போட்டோ வைரலாகி வருகிறது.

Recommended Video

பாட்டியுடன் பார்ட்டி, பக்காவான ராம்ப் வாக். ஆஹா.. வைரலாகும் பிரபல நடிகையின் த்ரோபேக் வீடியோ!

லாக்டவுன் காரணமாக வீடுகளில் அமர்ந்தபடி தங்களது புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர், நடிகர், நடிகைகள்.

வேறு பொழுதுபோக்கு இல்லை என்பதால் ஒர்க் அவுட், சமையல், டான்ஸ் உள்ளிட்ட வீடியோ, புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர்.

 அடா சர்மா

அடா சர்மா

சமூக வலைத்தளங்களில் அடிக்கடி கிளாமர் போட்டோஸ் மற்றும் வீடியோக்களைப் பதிவிட்டு வருபவர்களில், நடிகை அடா சர்மாவும் ஒருவர். ஜாலியான வீடியோக்களை பதிவிடும் அவரது ஃபன் வீடியோ மற்றும் போட்டோக்களை பார்ப்பதற்காக அதிகமான ரசிகர்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரை பின் தொடர்கின்றனர். அவரும் அவர்களை ஏமாற்றாமல் கிளாமர் போட்டோக்களை பதிவிட்டு வருகிறார்.

 தில்லாக போஸ்

தில்லாக போஸ்

இந்நிலையில், நடிகை அடா சர்மா இப்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றனர். ஒரு புகைப்படத்தில் பெட்டில் அமர்ந்தபடி, ஒவ்வொரு காலையும் அங்கும் இங்கும் விரித்தபடி தில்லாக போஸ் கொடுத்திருக்கிறார். மற்றொரு போட்டோவில் கை விரல்களை இரண்டு இரண்டாக சேர்த்து V வடிவத்தில் விரித்துள்ளார்.

 டிரை பண்ணுங்க

டிரை பண்ணுங்க

இதே போல உங்களால் செய்ய முடியுமா? டிரை பண்ணுங்க என்று ரசிகர்களிடம் கேட்டுள்ளார். இந்த ஹாட் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் கண்டபடி கமென்ட்களை அள்ளித் தெளித்துள்ளனர். ஒருவர் ஐயையோ, உங்க கால் விரல்களுக்கு என்னாச்சு? ஏலியன்ஸ் மாதிரி தெரியுதே? என்று கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்துள்ள அடா சர்மா, நான் ஏலியன் தான், நாங்க இப்படித்தான் விரல்களை நீட்டி பயிற்சி எடுப்போம் என்று தெரிவித்துள்ளார்.

 சும்மா இருக்கீங்களே

சும்மா இருக்கீங்களே

இன்னொரு ரசிகை, இதுபோல யாரும் டிரை பண்ணாதீங்க. இதை ஸ்டன்ட் பண்றவங்கதான் செய்வாங்க' என்று கூறியிருக்கிறார். இதற்கு கண்ணீர் விடுவது போன சிம்பளை போட்டிருக்கிறார் அடா. 'இவ்வளவு திறமையை வச்சுகிட்டு சும்மா இருக்கீங்களே, அடா சர்மா? என்று ஒரு ரசிகர் கேட்டுள்ளார். 'இப்படிலாம் போட்டு, எங்க கால், கையை சிக்கலுக்கு ஆளாக்க பாக்கிறீங்களா? என்று ஒருவர் கேட்டுள்ளார்.

 இதுபோல் வேண்டாம்

இதுபோல் வேண்டாம்

'நான் அப்படியே சிலிர்த்துட்டேன்' என்று கூறியுள்ள ஒரு நெட்டிசன், உங்க விரல்களுக்கு என்னாச்சு? என்று கேட்டுள்ளார். சிலர் இந்த மாதிரி போட்டோக்களை போடாதீங்க, நாங்க உங்களை ரசிக்கிறோம். ஆனா, இதுமாதிரி வேண்டாம்...உங்களுக்குப் புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்' என்று தெரிவித்துள்ளார்.

 சூப்பர்வைஸ்

சூப்பர்வைஸ்

இன்னொருவர் நாங்க பண்றோம். ஆனா, உங்களை போல ஸ்டன்ட் வுமன் சூப்பர்வைஸ் பண்ணணுமே? என்று கேட்டுள்ளார், ஒருவர். இன்னும் சிலர் அவர் கால் விரல்கள் நீட்டமாக இருப்பது பற்றி ஜோஸ்யமே கூறிவிட்டனர். இந்தப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

 இது நம்ம ஆளு

இது நம்ம ஆளு

நடிகை அடா சர்மா, தமிழில் சிம்புவின் 'இது நம்ம ஆளு' படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார். சக்தி சிதம்பரம் இயக்கிய, சார்லி சாப்ளின் 2 படத்திலும் நடித்திருந்தார். தெலுங்கு கன்னடப் படங்களில் நடித்துள்ளார். இந்தியில், பிர், கமாண்டோ 2, கமாண்டோ 3 படங்களில் நடித்துள்ளார். இப்போது, மேன் டு மேன் என்ற இந்திப் படத்தில் நடிக்க இருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X