சேலைய தார்பாய்ச்சி கட்டி, கர்லா கட்டையோட.. என்ன இப்படியொரு விளையாட்டு... வைரலாகும் ஹீரோயின் வீடியோ!
சென்னை: நடிகை அடா சர்மா வெளியிட்டுள்ள எக்சர்சைஸ் வீடியோ, வைரலாகி வருகிறது.
நடிகை அடா சர்மா, தனது சமூக வலைத்தளப்பக்கமான இன்ஸ்டாகிராமில் அடிக்கடி போட்டோக்களை பதிவு செய்வது வழக்கம்.
இவரது கிளாமர் போட்டோக்களை பார்ப்பதற்காகவே, தனி ரசிகர் கூட்டம் உண்டு. இவரது பக்கத்துக்கு அதிகமான ரசிகர்கள் வருவார்கள்.

இது நம்ம ஆளு
இவர், தமிழில், பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு நடித்திருந்த 'இது நம்ம ஆளு' படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார். இதை அடுத்து இயக்குனர் சக்தி சிதம்பரம் இயக்கிய, சார்லி சாப்ளின் 2 படத்தில் நடித்திருந்தார். பிறகு தமிழில் அதிக வாய்ப்பு கிடைக்கவில்லை அவருக்கு. இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.

ஜாலி கேலி கமென்ட்
ஆண்களுக்கான பிரபல ஃபேஷன் இதழ் ஒன்றின் அட்டைப் படத்திற்காக உச்சகட்ட கவர்ச்சியில் இவர் கொடுத்திருந்த போஸ் இந்தியளவில் கடந்த சில மாதங்களுக்கு முன் வைரலானது. அந்த புகைப்படத்தில், அதிக செக்ஸியாக போஸ் கொடுத்திருந்தார்.
தொடர்ந்து புதிய ஹாட் போட்டோக்களை வெளியிட்டு வருவது அவர் வழக்கம். அவரது போட்டோக்களுக்கு ரசிகர்கள், ஜாலி கேலி கமென்ட்களை பதிவிடுவார்கள்.

நோய் எதிர்ப்பு சக்தி
இந்நிலையில் இப்போது புதிய வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார், அடா சர்மா. அதற்கு கேப்ஷனாக, கொரோனா பரவும் நேரத்தில் உடற்பயிற்சி உந்துதல் தேவைப்படும் யாருக்காகவாவது, இதை டேக் செய்யுங்கள் என்று தெரிவித்துள்ளார். மேலும் வலிமையுடன், பயமில்லாமல் இருங்கள் என்று தெரிவித்துள்ள அவர், உடற்பயிற்சி செய்ய நேரமில்லை என்று சொன்ன அனைவருக்கும் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்ளும் நேரம் இது என்று கூறியுள்ளார்.

பூனை ஓடுகிறது
'உங்களுக்குப் பிடித்த உடற்பயிற்சியை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். நான் சிலம்ப பயிற்சியை மேற்கொள்வதற்கு முன், தோள்பட்டை வலிமைக்காக, கர்லா கட்டை எக்சர்சைஸ் செய்து வருகிறேன் என்று கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், சேலையை தார்பாய்ச்சிக் கட்டியபடி, கர்லா கட்டையுடன் எக்சர்சைஸ் செய்கிறார். அதைக் கண்டு, பூனை ஒன்று ஓடுகிறது.

திரும்ப ஓடிருக்கும்
இந்த வீடியோவை புகழ்ந்து, பலர் கமென்ட் போட்டுள்ளனர். சில கமென்ட்களுக்கு நடிகை அடா சர்மா அழகாகப் பதிலளித்துள்ளார். 'அந்த பூனை ஓடுதே... உங்களைப் பார்த்தா, உங்க எக்சர்சைஸை பார்த்தா?' என்று சிலர் கலாய்த்துள்ளனர். எக்சர்சைஸ் விஷயத்துல வித்யூத் ஜாம்வாலுக்குப் பிறகு நீங்கதாங்க' என்று சான்றிதழ் கொடுத்துள்ளார், ஒரு ரசிகர். இன்னொரு ரசிகர், இந்த வீடியோவை மட்டும் கொரோனா பார்த்ததுன்னு வையுங்களேன்... ஏன் வந்தேன், வந்தேன்னு திரும்ப ஓடிரும்' என்று கூறியுள்ளார் கிண்டலாக. இந்த வீடியோ வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











