தற்கொலை செய்து கொண்ட சுஷாந்த் சிங்.. அந்த வீட்டில் குடியேறிய நடிகை.. வாடகை எவ்வளவு தெரியுமா?

மும்பை: பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த வீட்டில், நடிகை அதா சர்மா வாடகைக்கு சென்றுள்ளார். சுஷாந்த் சிங்கின் மரணம் குறித்த மர்மமே விலகாத நிலையில், அந்த வீட்டில் நடிகை தனது பாட்டி மற்றும் அம்மாவுடன் குறியேறி உள்ளார்.

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ் புட் ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், அவரை அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது. இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் சின்னச்சின்ன அசைவுகளை கூட அப்படியே திரையில் காண்பித்து தோனி என ரசிகர்களிடையே பெயர் எடுத்துவிட்டார் சுஷாந்த் சிங்.

Sushant Singh Rajput The Kerala Story

அந்த படத்திற்கு பின் பாலிவுட் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக மாறிய இவருக்கு தொடர்ந்து நல்ல நடிக்கும் வாய்ப்பு வந்து கொண்டிருந்த போது, 2020 ஆம் ஆண்டு மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் சுஷாந்த் சிங். இவருடைய மர்மமான மரணம் ஒட்டுமொத்த திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பாலிவுட்டில் இருக்கும் நெப்போடிசம், அதனால் கைவிட்டு போன படங்கள், சுஷாந்துக்கு ஏற்பட்ட மன உளைச்சல் என பல குற்றச்சாட்டுகள் பாலிவுட் திரையுலகின் மீது கூறப்பட்டன.

சுஷாந்த் சிங்: மேலும், சுஷாந்த் சிங் மரணம், தற்கொலை அல்ல கொலை என்று சுஷாந்த் சிங்கின் நெருங்கிய நண்பர்களும், உறவினர்களும் சந்தேகங்களை எழுப்பினர். எனினும் அவரது உடற்கூராய்வு முடிவுகளின்படி சுஷாந்த் தற்கொலை செய்துகொண்டது உறுதிப்படுத்தப்பட்டது. இருப்பினும், சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுஷாந்த் சிங்கின் சகோதரி ஸ்வேதா சிங் கீர்த்தி, தனது சகோதரரின் மரணத்திற்கு நீதி கேட்டு போராடி வருகிறார்.

4.5 லட்சம் வாடகை: இந்த வழக்கின் மர்மமே இன்னும் விலகாத நிலையில், சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்ட வீட்டில் நடிகை அதா சர்மா குடியேறி உள்ளார். சுவாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டபின், போலீஸ், மீடியா என தொடர்ந்து பல பிரச்சனைகளால் மூடியே கிடந்த வீட்டில் தற்போது, நடிகை அதா சர்மா, தன்னுடைய பாட்டி மற்றும் அம்மாவுடன் பாந்த்ராவில் குடியேறியுள்ளார். 3,600 சதுர அடிக்கு மேல் உள்ள இந்த வீடு 4.5 லட்சம் ஒரு மாதத்திற்கு வாடகை கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.

தி கேரளா ஸ்டோரி: நடிகை அதா சர்மா "1920" என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். முதல் படத்திலேயே நடிப்பிற்காக பல பாராட்டுகளையும் பெற்றார். இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் பெரிய ஹிட் அடித்தது. பூரி ஜெகநாத் இயக்கிய ஹார்ட் அட்டாக் என்ற தெலுங்கு படத்தில் ஹீரோயினாக நடித்தார். தமிழில் இவர் சார்லி சாப்ளின் 2 என்ற படத்தின் தனது அறிமுகத்தை கொடுத்தார். மேலும், சிம்புவின் இது நம்ம ஆளு என்ற படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அண்மையில் இவர் இந்தியா முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்திய 'தி கேரளா ஸ்டோரி' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். இந்த படத்தில் நடித்ததற்காக இவர் கடும் விமர்சனத்திற்கு உள்ளானார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X