ஒரு காலை காண்பித்தபடி, 'பேன்ஸி மாப்' உடையில் பிரபல நடிகை..! லெக்பீஸ் என்று கலாய்க்கும் ஃபேன்ஸ்!

By

சென்னை: பிரபல நடிகை 'பேன்ஸி மாப்' என்று கூறி வெளியிட்டுள்ள புகைப்படத்தை ஏராளமான ரசிகர்கள் லைக் செய்துள்ளனர்.

Recommended Video

Reshma Pasupuleti Stunning dance moves, Star Sunita, Preethi sharma | Lock down Diaries

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. அதைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன.

இந்தியாவிலும் இந்த தொற்று வேகமாகப் பரவி வருகிறது. அதை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

வீடியோ, போட்டோ

வீடியோ, போட்டோ

இதனால் பொதுமக்கள் வீடுகளுக்கும் முடங்கி கிடக்கின்றனர். படப்பிடிப்புகள் இல்லை என்பதால் நடிகர், நடிகைகளும் வீட்டுக்குள் இருக்கின்றனர். அவர்கள் தினமும் ஏதாவது வீடியோ, போட்டோ என்று தங்களது சமூக வலைத்தளப் பக்கங்களில் வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் நடிகை அடா சர்மா, சமூக வலைத்தளங்களில் அடிக்கடி போட்டோஸ் பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

அடா சர்மா

அடா சர்மா

தினமும் ஜாலியாக ஏதாவது பதிவிடும் இவர், இந்தியில், பிர், கமாண்டோ 2, கமாண்டோ 3 படங்களில் நடித்துள்ளார். தமிழில் சிம்புவின் 'இது நம்ம ஆளு' படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார். சக்தி சிதம்பரம் இயக்கிய, சார்லி சாப்ளின் 2 படத்திலும் நடித்திருந்தார். தெலுங்கு கன்னடப் படங்களில் நடித்துள்ளார். இப்போது மேன் டு மேன் என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார்.

நீல நிற உடை

நீல நிற உடை

இவர் இப்போது தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள புதிய போட்டோவை, பல நெட்டிசன்கள் லைக் செய்துள்ளனர். தனது ஒரு காலை காட்டியபடி, நீல நிற உடையில் இருக்கும் அந்தப் போட்டோவுக்கு கேப்ஷனாக, இன்று எனக்கு 'கால்' டே, உங்களுக்கு? என்று கேட்டுள்ளார். அந்த உடையை 'பேன்ஸி மாப்' (ஆடம்பர துடைப்பான்) என்று கிண்டலாகக் கூறியுள்ளார்.

அழகை காட்டாது

அழகை காட்டாது

இதை பலர் கண்டபடி கலாய்த்து வருகின்றனர். ஒரு ரசிகை, நீங்க அழகாவே இருந்தாலும் இந்த கலர் அதிகமான அழகை காட்டாது என்று தெரிவித்துள்ளார். இன்னும் சிலர், சரிதான். இது ஒன்னும் அவ்வளவு சூப்பரான லுக் இல்லை' என்று தெரிவித்துள்ளார். ஒருவர், மத்தவங்களுக்கு எப்படியோ, உங்களுக்கு எல்லா கலருமே அழகா இருக்கும் என்று கூறியுள்ளார்.

மல்யுத்த வீராங்கனை

மல்யுத்த வீராங்கனை

சிலர், கால்ல ஏதும் பிரச்னையா? இப்படி தாங்கி நிற்கறீங்களே, அதனால கேட்டேன் என்று கூறியுள்ளனர். பழைய போட்டோவா? இது ஒன்னும் சிறப்பா இல்லை, புது போட்டோ போடுங்க என்று சிலரும், உங்க கால் மல்யுத்த வீராங்கனையோட கால் மாதிரி இருக்கு என்று சிலரும் கமென்ட் அடித்துள்ளனர். ஒருவர் ஆஹா, இதுதான் லெக் பீஸா? என்று கேட்டுள்ளார்.

பேன்ஸி மாப்

பேன்ஸி மாப்

இன்னும் சிலர், நடிகை அடாவின் அழகை சுகமாக வர்ணித்துள்ளனர். 'உடலை இவ்வளவு ஃபிட்டா வச்சிருக்கீங்களே, உங்க டயட் லிஸ்டை கொடுங்களேன் என்று சிலர் கேட்டுள்ளனர். ஏராளமானவர்கள் அவரது 'பேன்ஸி மாப்' என்ற வார்த்தையை ரசித்துள்ளனர். அதற்கு பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர். இந்த போட்டோ வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X