மலையாள தேசத்தில் நிவின் பாலியுடன் ஜோடி சேரும் அதிதிபாலன்
படவெட்டு திரைப்படத்தில் நிவின் பாலி சவாலான கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். நிவின் பாலியின் வித்தியாசமான தோற்றத்தையும் நடிப்பையும் பார்வையாளர்கள் எதிர்பார்க்கலாம் என்றும் கூறப்படுகிறது. அதேபோல், அதிதி பாலனுக்கும் இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.சென்னை: அருவி திரைப்படத்திற்கு பிறகு வேறு எந்த படத்திலும் நடிக்காமல் தவிர்த்து வந்த நடிகை அதிதி பாலன் தற்போது நிவின் பாலி நடிக்கும் படவெட்டு திரைப்படத்தின் மூலமாக மலையாள திரையுலகில் அறிமுகமாகிறார்.
மலையாள நடிகர் நிவின் பாலி, திரைத்துறையில் மிகவும் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவர். தமிழ்நாட்டிலும் நன்கு அறியப்பட்ட நடிகர் ஆவார். பிரேமம், பெங்களூர் டேய்ஸ் போன்ற மலையாள பிளாக்பஸ்டர் திரைப்படங்களுடன், நேரம், ரிச்சி போன்ற தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் அவர் நடித்த லவ் ஆக்சன் டிராமா திரைப்படம் இந்த ஓணம் விழாவிற்கு வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. மேலும் இந்த திரைப்படத்தில் நிவின் பாலி லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுடன் ஜோடியாக நடித்தார். அடுத்து திரைப்படத்தில் கோலிவுட்டைச் சேர்ந்த பிரபல நடிகையுடன் ஜோடி சேரத் தயாராக உள்ளார்.
கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான அருவி என்ற சூப்பர் ஹிட் திரைப்படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானவர் நடிகை அதிதி பாலன். இந்தப் படத்தில் தன் நடிப்பால் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் கவனத்தையும் தன் மீது திருப்பியவர். இத்திரைப்படத்திற்கு பிறகு வேறு எந்த திரைப்படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகவில்லை.
இந்நிலையில், அதிதி பாலன் நீண்ட நாட்களுக்கு பிறகு, நடிகர் நிவின் பாலியின் அடுத்த திரைப்படமான படவெட்டு திரைப்படத்தில் மலையாள திரைத்துறையில் அறிமுகம் ஆகிறார்.
படவெட்டு திரைப்படத்தில் நிவின் பாலி சவாலான கதாப்பாத்தில் நடிக்கிறார். நிவின் பாலியின் வித்தியாசமான தோற்றத்தையும் நடிப்பையும் பார்வையாளர்கள் எதிர்பார்க்கலாம் என்றும் கூறப்படுகிறது. அதேபோல், அதிதி பாலனுக்கும் இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அறிமுகமான இயக்குனர் லிஜு கிருஷ்ணாவே எழுதி இயக்கும் இப்படத்திற்கு தீபக் டி மேனன் ஒளிப்பதிவு துறையை மற்றும் ஷெபீக் முஹம்மது அலி எடிட்டிங் துறையை கையாளுகின்றனர்.
96 திரைப்படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியை அடுத்து இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இந்த திரைப்படத்துடன் மலையாளத்திற்கு மீண்டும் வருகிறார். இத்திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











