அதிதி ராவுக்கு இன்று பிறந்தநாள்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

சென்னை : இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான காற்று வெளியிடை திரைப்படத்தில் தனது அசாத்தியமான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரையும் கவர்ந்தவர் நடிகை அதிதி ராவ்.

அழகில் மட்டுமல்லாமல் நடிப்பிலும் சிறந்து விளங்கி வரும் அதிதி ராவ் தமிழ், தெலுங்கு, மலையாளம் என கலக்கி வருகிறார்.

இந்நிலையில் அக்டோபர் 28 ஆம் தேதியான இன்று அதிதி ராவ் தனது பிறந்தநாளை கொண்டாடி வருவதையொட்டி திரையுலகைச் சேர்ந்த பல்வேறு பிரபலங்களும் ரசிகர்களும் நண்பர்கள் என பலரும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டாடி வருகின்றனர்.

பிரபலமான நடிகையாக

பிரபலமான நடிகையாக

திகட்டாத சக்கரை போல வெள்ளை வெளேரென இருக்கும் தனது பளபளப்பான அழகாலும் சிறந்த நடிப்பாலும் இன்றுவரை ரசிகர்களை திரையில் மகிழ்ச்சிப்படுத்தி வரும் நடிகை அதிதி ராவ் இந்திய அளவில் மிகப் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

பெயரையும் புகழையும்

பெயரையும் புகழையும்

மலையாள திரைப்படங்களின் மூலம் நடிக்கத் தொடங்கிய இவர் "சிருங்காரம்" என்ற தமிழ் படத்தில் ஏற்கனவே நடித்திருந்தாலும் இவருக்கு நல்ல பெயரையும் புகழையும் தமிழ் ரசிகர்களிடம் பெற்றுத் தந்தது "காற்றுவெளியிடை" திரைப்படம்.

விருதுகளையும் வென்றார்

விருதுகளையும் வென்றார்

இயக்குனர் மணிரத்னத்தின் மென்மையான இயக்கத்தில் அனைவரும் அசந்துபோகும் வேடத்தில் நடித்து அசத்தி இருந்த அதிதி ராவ் காற்றுவெளியிடை திரைப்படத்திற்காக பல்வேறு விருதுகளையும் வென்றார்.

செக்கச் சிவந்த வானம்

செக்கச் சிவந்த வானம்

தமிழில் இவர் நடித்தது ஒரு சில திரைப்படங்கள் மட்டுமே என்றாலும் அனைவருக்கும் பிடித்த நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் அதிதி ராவ், காற்று வெளியிடை திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் "செக்கச் சிவந்த வானம்" திரைப்படத்தில் நடித்து அசத்தியதைத் தொடர்ந்து மிஸ்கினின் சைக்கோவிலும் நடித்து மிரட்டி இருந்தார்.

பிருந்தா மாஸ்டர்

பிருந்தா மாஸ்டர்

இவரது திரைப்படங்கள் மலையாளம் ஹிந்தி தெலுங்கு என பல மொழிகளில் நல்ல வரவேற்பை பெற்று வருவதை தொடர்ந்து இப்பொழுது இயக்குனர் பிருந்தா மாஸ்டர் இயக்கிவரும் ஹேய் சனாமிகா திரைப்படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

பாடலை பாடியுள்ளார்.

பாடலை பாடியுள்ளார்.

ஒரு நடிகையாக பலருக்கும் பரிச்சயமான அதிதி ராவ் தமிழில் ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் ஜெயில் திரைப்படத்தில் தனது இனிமையான குரலில் ஒரு பாடலையும் பாடியுள்ளார்.

பிறந்த நாள்

பிறந்த நாள்

இவ்வாறு சிறந்த நடிகை, பாடகி என பல முகங்களைக் கொண்ட அதிதி ராவுக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் இருந்து வரும் நிலையில் அக்டோபர் 28ஆம் தேதியன்று இவர் தனது பிறந்த நாளை கொண்டாடி வருவதை யொட்டி திரையுலகைச் சேர்ந்த பல்வேறு திரைப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் நண்பர்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டாடி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X