'முதல்ல, அதுக்கெல்லாம் மரியாதை கொடுங்க...' சமந்தாவை அப்படிச் சொல்லியதால் ஆவேசமான நடிகை அதிதி ராவ்!

By

சென்னை: நடிகை சமந்தாவுக்கு ஆதரவாக, நடிகை அதிதி ராவ் கூறியுள்ள கருத்துக்கு ரசிகர்கள் அதிக ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Recommended Video

Popular actress exit from cinema soon | Kolywood Actress

சினிமாவில் சென்டிமென்ட்களுக்கு பஞ்சம் கிடையாது. அது, இந்த ட்விட்டர் காலத்திலும் தொடர்வதுதான் காமெடியாக இருக்கிறது.

தமிழில், பாணா காத்தாடி, நான் ஈ, நீதானே என் பொன்வசந்தம், அஞ்சான், கத்தி தங்கமகன், தெறி, சீமராஜா, சூப்பர் டீலக்ஸ் உட்பட பல்வேறு படங்களில் நடித்தவர் சமந்தா.

திருமணம்

திருமணம்

தெலுங்கிலும் நடித்துவந்த சமந்தா, நடிகர் நாக சைதன்யாவுடன் காதலில் விழந்தார். பிறகு இருவீட்டு சம்மதத்துடன் அவரை திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணம் கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்தது. திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து நடித்து வரும் சமந்தா, தெலுங்கு, தமிழில் கவனம் செலுத்தி வருகிறார்.

த்ரிஷா கேரக்டரில்

த்ரிஷா கேரக்டரில்

இந்நிலையில் தமிழில் ஹிட்டான 96 படத்தின் ரீமேக்கில் நடித்திருந்தார் சமந்தா. விஜய் சேதுபதி நடித்த கேரக்டரில் ஷர்வானந்தும், த்ரிஷா கேரக்டரில் சமந்தாவும் நடித்திருந்தனர். தமிழில் இயக்கிய பிரேம்குமார், தெலுங்கிலும் இயக்கினார். படத்துக்கு ஜானு என்று டைட்டில் வைத்திருந்தனர். இந்தப் படம் கடந்த 7 ஆம் தேதி ரிலீஸ் ஆனது.

அவரை நீக்கிவிட்டு

அவரை நீக்கிவிட்டு

'என் மனதுக்கு நெருக்கமான படம் இது. இதன் ரீமேக்கில் நடிக்கவில்லை என்றால் வருத்தப் பட்டிருப்பேன்' என்று கூறியிருந்தார் நடிகை சமந்தா. ஆனால், எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால் அப்செட் ஆனார். இந்நிலையில் ஷர்வானந்துடன் மகா சமுத்திரம் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார், நடிகை சமந்தா. 'ஜானு' தோல்வி அடைந்ததால், அவரை நீக்கிவிட்டு அதிதி ராவ் ஹைதாரியை ஒப்பந்தம் செய்தனர்.

வெற்றி, தோல்வி

வெற்றி, தோல்வி

இதைக் குறிப்பிட்டு சில இணைய இதழ்கள் செய்தி வெளியிட்டிருந்தன. வழக்கமாக இதை நடிகைகள் கண்டுகொள்ள மாட்டார்கள். ஆனால், கடுப்பான நடிகை அதிதி ராவ், அந்த இணைய இதழை டேக் செய்து ட்விட்டரில் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுபற்றி அவர் ' வெற்றியோ, தோல்வியோ ஒரு நடிகர், நடிகையின் நம்பகத்தன்மையை பாதிக்காது என்பதை இங்கே சொல்வது முக்கியம் என்று நினைக்கிறேன்.

மரியாதை கொடுங்கள்

மரியாதை கொடுங்கள்

இதுபோன்ற சிந்தனையை தயவு செய்து ஆதரிக்க வேண்டாம். அடுத்தது, இந்த கேரக்டருக்கு இவர்கள் சரியாக இருப்பார்கள் என்று நினைத்து இயக்குனர்/ தயாரிப்பாளர்கள் கொடுக்கிற அறிவிப்புகளுக்கு உரிய மரியாதையை கொடுங்கள்' என்று கூறியுள்ளார். இதையடுத்து அதிதி ராவுக்கு ஆதரவாக ரசிகர்களும் களமிறங்கியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X