19 மணி நேரம் காத்திருந்தேன்.. விமான நிலையத்தில் நடந்த மோசமான அனுபவம்.. அதிதி ராவ் வேதனை!

சென்னை: மணி ரத்னம் இயக்கத்தில் வெளியான காற்று வெளியிடை படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை அதிதி ராவ். அந்த படத்தைத் தொடர்ந்து செக்க சிவந்த வானம், சைக்கோ, ஹே சினாமிகா உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். தற்போது பாலிவுட்டில் பிஸியான நடிகையாக இருக்கும் இவர் இங்கிலாந்து விமானநிலையத்தில் நடந்த மோசமான அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

அழகு பதுமையான நடிகை அதிதி ராவ் 2006-ம் ஆண்டு வெளியான பிரஜாபதி என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இதை தொடர்ந்து பாலிவுட்டில் பல திரைப்படத்தில் நடித்த இவர், அதன் பிறகு நான் மணி ரத்னம் படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு தெரிந்த முகமாக மாறினார். தற்போது இவர், தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு என பலத் திரைப்படங்களில் நடித்துக்கொண்டு இருக்கிறார்.

Aditi Rao Siddharth

மோசமான அனுபவம்: இந்த நிலையில், இங்கிலாந்து விமான நிலையத்தில் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை தனது எக்ஸ் தளபக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் மும்பையில் இருந்து வந்த விமானம் லண்டனில் தரையிறங்கியது. இங்கு எனது உடைமைகள் அடங்கிய லக்கேஜை எதிர்பார்த்து கிட்டத்தட்ட 19 மணி நேரமாக நான் காத்திருக்கிறேன். ஆனால், சூட்கேட்ஸ் வந்து சேரவில்லை. இது மோசமான அனுபவமா இருந்தது. என்னைப்போல பல பயணிகளும் லக்கேஜிற்காக காத்திருந்து வெறுப்படைந்து உள்ளனர். பசியால் குழந்தைகள் வாடுகின்றனர்.லக்கேஜ் இன்னும் வரவில்லை. அதை விடுவிக்க எந்தவிதமான உதவியையும் விமான நிலைய ஊழியர்கள் செய்யவில்லை இவ்வாறு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

Aditi Rao Siddharth

காதல் திருமணம்: நடிகை அதிதி ராவ், சித்தார்த்துடன் இணைந்து மஹாசமுத்திரம் படத்தில் நடித்த போது இருவரும் காதலிக்க தொடங்கியதாக கூறப்படுகிறது. படத்தின் ப்ரோமோஷனுக்கு ஒரே காரில் ஜோடியாக சென்றனர். சினிமா விழாக்கள், திருமண வீடு, பார்ட்டி என அனைத்திற்கும் இருவரும் ஜோடியாகவே வலம் வந்த நிலையில், அண்மையில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. இருவரும் விரைவில்திருமணம் செய்து கொள்ள உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X