பேண்ட் போடாமல் நடுரோட்டில் பப்பரப்பான்னு போஸ்… படு அட்டகாசம் செய்யும் மணிரத்னம் பட நடிகை!
சென்னை : காற்று வெளியிடை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ரீ-என்ட்ரி கொடுத்த நடிகை அதிதி ராவ் மீண்டும் மணிரத்னம் இயக்கிய செக்க சிவந்த வானம் படத்திலும் நடித்திருந்தார்.
ஆர் எக்ஸ் 100 திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு அஜய் பூபதி இயக்கிவரும் மகா சமுத்திரம் என்ற பிரம்மாண்ட திரைப்படத்தில் சித்தார்த் மற்றும் சர்வானந்த் ஹீரோவாக நடிக்க இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக அதிதி ராவ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
பிரபல நடன இயக்குனர் பிருந்தா மாஸ்டர் முதல் முறையாக இயக்குனராக அறிமுகமாகும் ஹே சனாமிகா திரைப்படத்தில் துல்கர் சல்மானுடன் இணைந்து ரொமான்ஸ் செய்திருக்கும் அதிதி இப்போது நடுரோட்டில் பேண்ட் போடாமல் படு அட்ராசிட்டி செய்தவாறு வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளன.

அழுத்தமான காதலை
மனதைக் கொள்ளை கொள்ளும் காதல் திரைப்படங்களை இயக்குவதில் சிறந்தவரான மணிரத்னம் ராணுவ விமான பைலட்டுக்கும் டாக்டருக்கும் இடையே இருக்கும் அழுத்தமான காதலை உணர்ச்சிப் பூர்வமாக காட்டியிருந்த காற்று வெளியிடை திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து அனைவரையும் ஈர்த்த நடிகை அதிதி ராவ் இப்பொழுது தென்னிந்திய சினிமாவில் மோஸ்ட் வான்டட் அக்ட்ரஸாக உள்ளார்.

முக்கிய ரோலில்
தீபிகா படுகோன் நடிப்பில் இந்தியில் பிரம்மாண்டமாக உருவான பத்மாவதி திரைப்படத்தில் அசாத்தியமான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுக்களை வென்ற அதிதி ராவ் இந்தியிலும் எக்கச்சக்கமான திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்க பிப்ரவரியில் வெளியாக இருக்கும் தி கேர்ள் ஆன் தி ட்ரெயின் மர்மங்கள் நிறைந்த த்ரில்லர் திரைப்படமாக ஓடிடியில் வெளியாக உள்ளது. பிரீத்தி ஜிந்தா கதாநாயகியாக நடிக்க முக்கிய ரோலில் அதிதி ராவ் நடித்துள்ளார்.

இயக்குனராக அவதாரம்
இதுவரை நாம் அனைவருக்குமே நடன இயக்குனராக மட்டுமே பரிச்சயமாகி வந்த பிருந்தா மாஸ்டர் இப்பொழுது இயக்குனராக அவதாரம் எடுத்து முதல் படமே ரொமாண்டிக் காதல் திரைப்படமாக உருவாக அதற்கு ஹே சனாமிகா என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதில் துல்கர் சல்மான் ஹீரோவாக நடிக்கிறார் அதிதி ராவ் மற்றும் காஜல் அகர்வால் என இரண்டு முன்னணி நடிகைகளும் இதில் நடித்துள்ளனர்.

நடு ரோட்டில் அட்ராசிட்டி
ஆர் எக்ஸ் 100 என்ற தனது முதல் படத்திலேயே வெற்றி இயக்குனராக முத்திரையை பதித்த இயக்குனர் அஜய் பூபதி இரண்டாவதாக மகாசமுத்திரம் படத்தை பிரம்மாண்டமாக இயக்க அதில் கதாநாயகியாக நடித்து அசத்த உள்ள அதிதி ராவ் இப்பொழுது பேண்ட் எதுவும் போடாமல் கொஞ்சும் அழகில் நடு ரோட்டில் அட்ராசிட்டி செய்தவாறு தினுசு தினுசா போஸ் கொடுத்துக்கொண்டு வெளியிட்டுள்ள செம க்யூட்டான புகைப்படங்கள் இப்பொழுது இணையதளத்தை கலக்கி வருகிறது.


Click it and Unblock the Notifications











