எனக்கு இந்த கலர் மீது ரொம்ப நம்பிக்கை.. அதிதிராவின் பிங்க் கலர் போட்டோசூட்!

சென்னை : காற்று வெளியிடை திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்து இப்போது பல திரைப்படங்களில் நடித்து வருபவர் நடிகை அதிதி ராவ்.

பால் போன்ற மேனியால் ரசிகர்களை குளிர்வித்து வரும் இவர் சமீபத்தில் சைக்கோ திரைப்படத்தில் நடித்து அனைவரும் மெச்சும் அளவிற்கு மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

துல்கர் சல்மானுடன் இவர் புதிதாக திரைப் படமொன்றில் நடித்து வரும் அதே சமயம் இப்போது வித்தியாசமான உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு தனக்கு இந்த கலரில் ரொம்ப நம்பிக்கை இருக்கு என அதிதி ராவ் கூறியிருக்கிறார்.

படங்களிலும் நடிக்கவில்லை

படங்களிலும் நடிக்கவில்லை

மூன்று தேசிய விருதுகளை வென்ற சிருங்காரம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு முதல் முறையாக அறிமுகமான நடிகை அதிதி ராவ் அதன்பிறகு எந்த ஒரு தமிழ் திரைப் படங்களிலும் நடிக்கவில்லை.

ரீ-என்ட்ரி கொடுத்தார்

ரீ-என்ட்ரி கொடுத்தார்

ஹிந்தியில் படு பிஸியாக நடித்து வந்த அதிதி ராவ் தமிழ் ரசிகர்களுக்கு அந்த அளவுக்கு பரிச்சயம் ஆகாத நிலையில் இயக்குனர் மணிரத்னம் இயக்கிய "காற்று வெளியிடை" திரைப்படத்தின் மூலம் பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழ் சினிமாவுக்கு ரீ-என்ட்ரி கொடுத்தார். இதில் ரசிகர்கள் பலரும் இவரை தமிழ் சினிமாவிற்கு புதுவரவாகவே பார்த்தனர்.

காதலர்களுக்கு பிடித்தமான

காதலர்களுக்கு பிடித்தமான

காற்று வெளியிடை திரைப்படம் காதலை வேறுவிதமாக கூறியிருந்த நிலையில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் சுமாரான வெற்றியை மட்டுமே இந்த திரைப்படம் பெற்றிருந்தாலும் காதலர்களுக்கு இன்றளவும் மிகப் பிடித்தமான திரைப்படமாக இருந்து வருகிறது.

சிறந்த நடிப்பை

சிறந்த நடிப்பை

தனித்துவமான திரைப்படங்களை இயக்குவதில் பெயர் பெற்றவரான இயக்குனர் மிஸ்கின், சமீபத்தில் வித்தியாசமான கதைக்களத்தை கொண்டு இயக்கியிருந்த சைக்கோ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்ற நிலையில் இதில் அதிதி ராவ் அனைவரும் மெச்சும் அளவிற்கு தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெற்று இருந்தார்.

செம ஆக்டிவாக

செம ஆக்டிவாக

இந்நிலையில் நடன இயக்குனர் பிருந்தா மாஸ்டர் இயக்கக் கூடிய புதிய திரைப்படம் ஒன்றில் கதாநாயகியாக நடித்து வரும் இவர் துல்கர் சல்மானுடன் இணைந்து ஜோடி போட்டு வரும் அதே சமயம் சமூக வலைதளங்களிலும் செம ஆக்டிவாக இருக்கிறார்.

குயின் பேபி

குயின் பேபி

பிங்க் கலரில் பார்க்கவே கண்கள் கூசுகின்றன வகையில் மிக வித்தியாசமாக டைட்டான உடை அணிந்து கொண்டு, அதே பிங்க் கலரில் ஆண்கள் அணிகின்றவாறு இருக்கும் பேண்ட் ஒன்றையும் அணிந்து கொண்டு, எனக்கு பிங்க் கலரில் மீது ரொம்ப நம்பிக்கை உள்ளது என அதிதி ராவ் வெளியிட்டிருக்கும் இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அதே சமயம் இவரது ரசிகர்கள் "குயின் பேபி" என செல்லமாக வர்ணித்தும் வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X