அதிதி ராவ் வாங்கிய சொகுசு காரின் விலை ரூ.1 கோடியாம்… வாய் பிளந்த ரசிகர்கள் !

மும்பை : நடிகை அதிதி ராவ் ஹைதாரி சொகுசு ஒன்றை புதிதாக வாங்கி உள்ளார்.

அந்த காரின் புகைப்படம் இணையத்தில் வெளியான உடன் அந்த கார் குறித்து இணையத்தில் ஆராயத் தொடங்கி விட்டனர் ரசிகர்கள்.

இந்த காரின் விலையை ஒரு கோடி என தெரிந்ததும் ரசிகர்கள் வாய் பிளந்து, என்னது.. ஒரு கோடியா என கேட்டு வருகின்றனர்.

அதிதி ராவ் ஹைதாரி

அதிதி ராவ் ஹைதாரி

லட்சனமான முகம்,பார்த்தவுடன் பற்றிக் கொள்ளும் அழகு என அனைத்து அம்சங்களும் கச்சிதமாக பொருந்தியவர் அதிதி ராவ் ஹைதாரி. ஹைதராபாத்தை பூர்வீகமாக கொண்ட இவர், 2009 ம் ஆண்டு நடிகர் சத்யதீப் மிஸ்ராவை திருமணம் செய்து கொண்டார். ஆனால், சில கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் இருவரும் விவாகரத்து பெற்றனர்.தற்போது முன்னணி நாயகியாக வளர்ந்து வரும் அதிதி ராவ் பற்றி ஒரு ஸ்பெஷல் ரிப்போட்.

சிருங்காரம்

சிருங்காரம்

2007ம் ஆண்டு தமிழில் வெளிவந்த "சிருங்காரம்" என்ற திரைப்படம் தான் இவருக்கு முதல் திரைப்படம் ஆகும். இப்படத்தில் தேவதாசி கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார். மேலும், இவர் நடித்த முதல் படத்திலேயே வித்தியாசமான கதாபாத்திரத்தை தேர்வு நடித்தார் என்பது பாராட்டக்கூடியதாக பார்க்கப்படுகிறது. மேலும், இப்படத்திற்கு 3 தேசிய விருதும், 2 தமிழக அரசு விருதும் கிடைத்துள்ளது.

சிறந்த துணை நடிகை

சிறந்த துணை நடிகை

டெல்லி6, ஏ சாலி ஜிந்தகி, ராக்ஸ்டார், மர்டர்3 ஆகிய படங்கள் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கின. 2011ம் ஆண்டு வெளியான ‘ஏ சாலி ஜிந்தகி‘ என்ற திரைப்படம் இவருக்கு சிறந்த துணை நடிகைக்கான விருதை பெற்றுத் தந்ததோடு. திரைத்துறையில் ஒரு நல்ல பெயரையும் பெற்றுத் தந்து கலைத்துறையில் நிலைத்து நிற்க செய்தது.

காற்று வெளியிடை

காற்று வெளியிடை

ஏறக்குறைய 10 வருடம் கழித்து தமிழ் திரைத்துறையில் மீண்டும் காலடி எடுத்து வைத்த அதிதி ராவ். இயக்குனர் மணிரத்னம் இயக்கிய ‘காற்று வெளியிடை‘ படத்தில் டாக்டர் லீலா ஆபிரகாம் என்ற கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி கதாபாத்திரத்தின் தன்மை உணர்ந்து நடித்திருந்தார். மீண்டும் மணிரத்னம் செக்கச் சிவந்த வானம் படத்தில் செய்தியாளராகவும் நடித்திருந்தார் அதிதி ராவ்.

நல்ல பெயர்

நல்ல பெயர்

மிஷ்கின் இயக்கத்தில் சைக்கோ படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும், மணிரத்னம் இயக்கும் வரலாற்று நாவலான பொன்னியின் செல்வன் திரைப்படத்திலும், துக்ளக் தர்பார், ஹே சினாமிகா ஆகிய தமிழ் படங்களில் நடித்து முடித்துள்ளார்.

Recommended Video

Anjali Rao | Simbu ரொம்ப Genuine | Anantham | Filmibeat Tamil
சொகுசு கார்

சொகுசு கார்

ஏராளமான படங்களை கைவசம் வைத்திருக்கும் அதிதி ராவ், டி க்யூ7 ரக சொகுசு கார் ஒன்றைப் புதிதாக வாங்கியுள்ளார். அவர் ஷோருமில் காரை வாங்கும் புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இந்த காரின் மதிப்பு ரூ.95.6 லட்சம். வரியுடன் சேர்த்து ரூ.1.05 கோடி என்று கூறப்படுகிறது. காரின் விலையை கேட்ட ரசிகர்கள் அப்படியே வாயை திறந்தபடி உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X