வாய்ப்புக்காகப் படுக்கைக்கு அழைக்கும் வழக்கம்.. மாட்டிக்கொள்ளும் அப்பாவிகள்.. பிரபல நடிகை பகீர்!

By

சென்னை: சினிமாவில் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான அனுபவங்களையும் மிரட்டல்களையும் எதிர்கொள்கிறார்கள் என்று பிரபல நடிகை தெரிவித்துள்ளார்.

Recommended Video

Anna Ben creates Awareness on Fake Casting call

இந்தி, தமிழ், தெலுங்கு, மற்றும் மலையாள மொழிகளில் நடித்து வருபவர், அதிதி ராவ் ஹைதாரி.

தமிழில் சாரதா ராமநாதன் இயக்கிய சிருங்காரம் என்ற படம் மூலம் தமிழுக்கு வந்தார். இதில் தேவதாசியாக நடித்திருந்தார்.

காற்று வெளியிடை

காற்று வெளியிடை

பின்னர் இந்தியில் டெல்லி 6, ராக்ஸ்டார், மர்டர் 3, பத்மாவத் உட்பட சில படங்களில் நடித்தார். பின்னர் பத்து வருடங்களுக்குப் பிறகு, மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை படம் மூலம் தமிழுக்கு, மீண்டும் வந்தார். இதில் கார்த்தி ஜோடியாக அவர் நடித்திருந்தார். ஸ்ரத்தா ஶ்ரீநாத், ஆர்.ஜே.பாலாஜி உட்பட பலர் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்திருந்த இந்தப் படத்துக்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்திருந்தார்.

லாக்டவுன்

லாக்டவுன்

இந்தப் படத்தை அடுத்தும் மணிரத்னத்தின் செக்கச் சிவந்த வானம், மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி பார்வையற்றவராக நடித்த 'சைக்கோ' படங்களில் நடித்தார். இதிலும் இவர் நடிப்பு பேசப்பட்டது. இப்போது விஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார், நடன இயக்குனர் பிருந்தா இயக்கும் ஹே சினாமிகா படங்களில் நடித்து வருகிறார். லாக்டவுன் காரணமாக இந்தப் படங்களின் ஷூட்டிங் தடைபட்டுள்ளது.

சுஃபியும் சுஜாதாயும்

சுஃபியும் சுஜாதாயும்

இவர் நடித்த மலையாள படமான, சுஃபியும் சுஜாதாயும் (Sufiyum Sujathayum) என்ற படம் கடந்த சில நாட்களுக்கு முன் அமேசான் ஒடிடி தளத்தில் வெளியானது. ஜெயசூர்யா ஹீரோவாக நடித்திருந்தார். இந்நிலையில் நடிகை அதிதி ராவ் சமீபத்தில் பேட்டி அளித்தார். அப்போது சினிமாவில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் இருக்கிறது என்று கூறப்படுவது பற்றி அவரிடம் கேட்டனர்.

சினிமாவில் சகஜம்தான்

சினிமாவில் சகஜம்தான்

இந்தக் கேள்விக்குச் பல நடிகைகள் பதில் கூறியுள்ளனர். இது சினிமாவில் சகஜம்தான் என்றும் 90 சதவிகிதம் இது நடக்கிறது என்றும் சில அப்பாவி நடிகைகள் இதில் சிக்கிக் கொள்வதாகவும் பல நடிகைகள் இதுபற்றி தெரிவித்துள்ளனர். சமீபத்தில் கூட நடிகை தேஜஸ்வி இதுபற்றி கூறியிருந்தார். சில நடிகைகள், தங்களுக்கு அப்படி ஏதும் நடக்கவில்லை என்று கூறியுள்ளனர். இந்நிலையில் இதுபற்றி அதிதி ராவ் கூறியிருப்பதாவது;

அதிர்ஷ்டம் காரணம்

அதிர்ஷ்டம் காரணம்

'சினிமா இன்டஸ்ட்ரியில் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான அனுபவங்களையும் மிரட்டல்களையும் எதிர்கொள்கிறார்கள். சிலர், இதுபோன்ற மிரட்டல்களில் இருந்து புத்திசாலித்தனமாக தப்பி விடுகிறார்கள். சில அப்பாவிகள் மாட்டிக்கொள்கிறார்கள். நான் அதில் இருந்து தப்பித்திருப்பதற்கு என் அதிர்ஷ்டம்தான் காரணம். இவ்வாறு கூறியிருக்கிறார். இதனால் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் இருக்கிறது என்பதை அவர் மறைமுகமாக வெளிப்படுத்தி இருக்கிறார் என்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X