காலை தூக்கி கைய தொட்டு.. ஐயையோ இது களறிப் பயிற்சியாம்ல.. வைரலாகும் பிரபல நடிகையின் ’வாவ்’ வீடியோ!
சென்னை: பிரபல நடிகை வெளியிட்டுள்ள களறி பயிற்சி வீடியோ, ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்துள்ளது.
இந்தியில் டெல்லி 6, ராக்ஸ்டார், மர்டர் 3, குப்சுரத், பத்மாவத் உட்பட பல படங்களில் நடித்தவர் அதிதி ராவ் ஹைதாரி.
மணிரத்னம் இயக்கிய காற்றுவெளியிடை படம் மூலம் தமிழுக்கு வந்தார். இதில் கார்த்தி ஜோடியாக நடித்திருந்தார்.

ஹே சினாமிகா
இந்தப் படம் கவனிக்கப்பட்டதை அடுத்து, மீண்டும் மணிரத்னம் இயக்கிய செக்கச்சிவந்த வானம் படத்தில் நடித்தார். பின்னர் மிஷ்கின் இயக்கிய சைக்கோ படத்தில் உதயநிதி ஜோடியாக தாஹினி எனும் கேரக்டரில் நடித்தார். இப்போது விஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார், பிருந்தா மாஸ்டர் இயக்கும் ‘ஹே சினாமிகா' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

பொன்னியின் செல்வன்
ஹே சினாமிகா படத்தில் துல்கர் சல்மான் ஹீரோவாக நடிக்கிறார். இன்னொரு ஹீரோயினாக காஜல் அகர்வால் நடிக்கிறார். இதையடுத்து மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து வரும் அதிதி ராவ், லாக்டவுன் காரணமாக வீட்டில் இருக்கிறார்.

ஆச்சரியம்
கொரோனா லாக்டவுன் காரணமாக சினிமா துறையும் முடங்கி இருக்கிறது. இதனால் நடிகர், நடிகைகள் வீட்டுக்குள் இருந்தபடி, சமையல், இசை, நடனம், ஒர்க் அவுட் தொடர்பான வீடியோ, போட்டோக்களை தங்களது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். நடிகை அதிதிராவும் அதை செய்து வருகிறார். இப்போது அவர் வெளியிட்டுள்ள வீடியோ, ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

காலைத் தூக்கி
வழக்கமாக எக்சர்சைஸ் போட்டோக்களை வெளியிடும் அதிதி ராவின், இப்போதைய வீடியோவில், வேகமாக வந்து நின்று காலைத் தூக்கி கைகளை தொடுகிறார். அதைப் பார்ப்பவர்கள் ஆத்தாடி என்று வியக்கிறார்கள். இது களறி பயிற்சியாம். தனது ஒர்க் அவுட்டில் ஒரு பகுதியாக, களறியில் செய்யும் பயிற்சியை செய்துள்ளார் அவர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

வாஹா பார்டர்
இதற்கு ரசிகர்கள் ஏராளமானோர் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். காலை இந்த உயரத்துக்கு தூக்கினா, வாஹா அட்டாரி பார்டர் போக உங்களுக்கு தகுதி இருக்கு என்று சிலர் தெரிவித்துள்ளனர். அடுத்த மாதம் யாரையோ உதைக்கப் போறீங்கன்னு தெரியுது என்று சிலர், உங்க யாருன்னு சொன்னா உதவியா இருக்கும் என்று சிலர் கேட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications