இசையில்லாமல் வளைந்து நெளிந்து அப்படியொரு நடனம்.. அசத்தும் மணிரத்னம் ஹீரோயின்.. வியக்கும் ரசிகர்கள்!
சென்னை: நடிகை அதிதி ராவ் ஹைதாரி வெளியிட்டுள்ள அழகான நடன வீடியோ வைரலாகி வருகிறது.
Recommended Video
லாக்டவுன் காரணமாக பொதுமக்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியேறாமல் இருக்கின்றனர். சில பகுதிகளில் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது.
படப்பிடிப்புகள் இல்லை என்பதால், நடிகர் நடிகைகளும் வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர்.

புகைப்படங்கள்
தாங்கள் வீட்டில் இருந்தபடி ஒர்க் அவுட், யோகா, சமையல், நடனம் ஆகியவற்றில் ஈடுபட்டு அது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்களை தங்களது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர். பிரபல நடிகை அதிதி ராவ் ஹைதாரியும் அப்படி, வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

நடன வீடியோ
கடந்த சில நாட்களுக்கு முன் அவர் வெளியிட்ட எக்சர்சைஸ் வீடியோ வைரலானது. களறி பயிற்சியில் ஈடுபட்ட வீடியோ அது. இந்நிலையில், இப்போது அழகான நடன வீடியோவை வெளியிட்டுள்ளார். நடிகை அதிதி ராவ் சிறந்த நடனக் கலைஞரும் கூட. அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், தண்ணீர் சத்தத்தைப் பின்னணியாகக் கொண்டு அவர் புதுமையாக நடனமாடுகிறார்.

அணைத்து விட்டேன்
'எனது குரு லீலா சாம்சன் பிறந்த நாளுக்காக நான் நடனம் ஆடத் தொடங்கியதும் இசையை அணைத்து விட்டேன். தண்ணீர் விழும் சத்தம் கேட்டுக்கொண்டிருக்கிறது. இது, அவர் நடனம் ஆடிய அர்த்தநாரீஸ்வர அஷ்டகத்தை ஞாபகப்படுத்தியது' என்று ஆரம்பித்து அந்த நடனம் பற்றி குறிப்பிட்டிருக்கிறார் அதிதி ராவ். ஐந்து வயதில் இருந்தே இதை செய்து வருவதாகவும் கூறியுள்ளார்.

ஹே சினாமிகா
இதையடுத்து ரசிகர்கள் பலர் அந்த வீடியோவை லைக் செய்துள்ளனர். பலர் இதே போன்ற வீடியோவை தொடர்ந்து வெளியிடுமாறு கேட்டுள்ளனர். நடிகை அதிதி ராவ், மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை படம் மூலம் தமிழுக்கு வந்தார். இதில் கார்த்தி ஜோடியாக நடித்திருந்தார். அடுத்து செக்கச் சிவந்த வானம், மிஷ்கினின் சைக்கோ படங்களில் நடித்தார். இப்போது விஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார், ஹே சினாமிகா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











