போலி போட்டோஷூட் ஆஃபர்.. வாட்ஸ் அப்பில் ஓவர் ஸ்மார்ட் ஃப்ராட்.. எச்சரித்த அதிதி ராவ்!

சென்னை: நடிகையும் பாடகியுமான அதிதி ராவ் ஹைதரி 2006 ஆம் ஆண்டு வெளிவந்த பிரஜாபதி என்கிற மலையாள திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர். இதன்பின் பாலிவுட் பக்கம் சென்ற அதிதி ராவ், தமிழில் மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை படத்தில் நடித்தார். பின், செக்க சிவந்த வானம், சைக்கோ, ஹே சினாமிகா ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த இவர், நடிகர் சித்தார்த்தை காதலித்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

தற்போது அதிதி ராவ் தனது இன்ஸ்டாகிராமில் மோசடி குறித்து முக்கியமான பதிவு ஒன்ற பகிர்ந்துள்ளார். அதில், எனது பெயர் மற்றும் படங்களையும் பயன்படுத்தி வாட்ஸ்அப்பில் ஒரு நபர் மோசடி செய்து வருகிறார். தனிப்பட்ட தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி, பலரை வாட்ஸ்அப் மூலம் தொடர்பு போட்டோஷூட் வாய்ப்புகளை வழங்குவதாக ஏமாற்றி வருகிறார். அது நான் இல்லை, நான் இந்த வழியில் யாரையும் அணுக மாட்டேன், வேலை சம்பந்தப்பட்ட எந்த விஷயத்திற்கும் தனிப்பட்ட எண்ணை பயன்படுத்த மாட்டேன். அனைத்து தொடர்புகளும் எப்போதும் எனது குழு மூலமாகவே நடக்கும் என்பதை உங்களுக்கு தெளிவுப்படுத்துகிறேன்.

Aditi Rao Hydari Whatsapp scam
Photo Credit:

வாட்ஸ் ஆப் மோசடி: தன்னிடம் இருந்து வருவதாகக் கூறி வரும் சந்தேகத்திற்குரிய செய்திகளுக்கு யாரும் பதிலளிக்க வேண்டாம். அங்கீகரிக்கப்படாத எண்களில் இருந்து வரும் தொலைப்புகளை யாரும் எடுக்க வேண்டாம் என்றும் அதிதி ரசிகர்களை கேட்டுக்கொண்டுள்ளார். இதுபோன்று, யாராவது உங்களை தொடர்பு கொண்டால், உடனே என் குழுவிடம் தெரிவிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார். மேலும், இன்ஸ்டாகிராம் பதிவில், மோசடி செய்தவரின் தொலைபேசி எண்ணைக் காட்டும் ஸ்கிரீன்ஷாட் ஒன்றையும் பகிர்ந்துள்ள அதிதி ராவ், இந்த மோசடி விவகாரத்தை உடனடியாக என் கவனத்திற்குக் கொண்டு வந்த ரசிகர்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பிரபலங்களை குறிவைத்து நடக்கும் இத்தகைய மோசடிகள் தொடர் கதையாகி வருகிறது. டிஜிட்டல் தளங்களை பயன்படுத்தி மோசடி நடவடிக்கைகளில் பலர் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோன்ற கும்பலிடம் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும், பிரபலங்கள் அல்லது அவர்களது பிரதிநிதிகளிடமிருந்து வரும் தகவலின் நம்பகத்தன்மையை சரிபார்த்து, சந்தேகத்திற்கிடமாக இருந்தால், சம்பந்தப்பட்ட தளங்கள் அல்லது சட்ட அமலாக்க முகமைகளுக்கு தெரிவிக்குமாறும் அவர்கள் அறிவுறுத்தி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X