2020ம் ஆண்டு திரும்ப வேண்டும்..பீல் பண்ண அதிதி ராவ்..ஆதரவு தந்த சித் ஸ்ரீராம் !

மும்பை : நடிகை அதிதி ராவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் பீல் பண்ணி ஒரு பதிவை போட்டுள்ளார்.

சிறகை போல மென்மையான தேகம் கொண்டு சினுங்கும் சிரிப்பால் அனைவரையும் சிக்கவைக்கும் நடிகை அதிதி ராவ். மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் நடித்துக் கொண்டிருந்த இவர் ஹிந்தியில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

பால் போல முகம் கொண்ட இவர் தற்பொழுது இன்ஸ்டாகிராமில் பதிவில், இந்தாண்டு எனக்கு திரும்ப வேண்டும் என ஏக்கத்துடன் பதிவிட்டிருந்தது ரசிகர்களிடையே உச்சுக் கொட்ட வைத்துள்ளது.

பெரிய புகழை

பெரிய புகழை

மலையாளம் மற்றும் தமிழ் படங்களின் மூலம் அறிமுகமான இவர் பார்ப்பதற்கு பால் போன்ற தேகத்துடன் பல மொழி படங்களில் நடித்துவருகிறார். தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் இவர் நடித்திருந்தாலும் ஹிந்தியில் இவர் நடித்த "ஏ சாலி ஜிந்தகி" என்ற படம் இவருக்கு மிகப் பெரிய புகழை பெற்று தந்தது. மேலும் இந்த படத்திற்காக இவர் விருதுகளைப் பெற்றுள்ளார்.

அசத்தல் நடிப்பு

அசத்தல் நடிப்பு

அசத்தல் நடிப்பாலும் ஆளைக்கொல்லும் அழகாலும் மக்களைக் கவர்ந்து வந்த இவர் பல மொழிகளில் பல விருதுகளை வாங்கியுள்ளார். கே சாலி ஜிந்தகி என்ற படத்தின் மூலம் பிரபலமான இவர் முதன்முதலில் மலையாளத்தில் பிரஜாபதி என்ற படத்தில் நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து தமிழில் சிருங்காரம் என்ற படத்திலும் நடித்திருந்தார். இவ்வாறு தனது நடிப்பு வாழ்க்கையை சிறிய கதாபாத்திரங்களில் மூலம் தொடங்கிய இவர் பாலிவுட்டில் அபிஷேக் பச்சன் நடித்த டெல்லி 6 என்ற படத்தின் மூலம் அடி எடுத்து வைத்தார். எனினும் இவரின் அடுத்த படமான "ஏ சாலி ஜிந்தகி" என்ற படம் மிகப்பெரிய பெயரையும் பல விருதுகளையும் பெற்றுத் தந்தது. அதற்குப்பின் ரன்பீர் கபூருடன் "ராக் ஸ்டார்" என்ற மாபெரும் வெற்றி படத்தில் நடித்து உலகெங்கிளும் பிரபலமானார்.

கதாநாயகியாக அறிமுகம்

கதாநாயகியாக அறிமுகம்

பாலிவுட்டில் தொடர்ந்து நடித்து வந்த இவர் மீண்டும் தமிழில் மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை படத்தின் மூலம் நடிகர் கார்த்தியுடன் தனது ரீ எண்ட்ரியை தமிழில் கொடுத்து கதாநாயகியாக அறிமுகம் செய்யப்பட்டார். தமிழில் கதாநாயகியாக நடித்த முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதை கொள்ள கொண்ட இவர், நடிப்பு மட்டுமல்லாமல் நடனத்திலும் பாடகியாகவும் இருந்து வருகிறார். இந்த படம் வியாபார ரீதியாக விமர்சனங்களை சந்தித்து இருந்தாலும் இவரின் நடிப்பும் இந்த படத்தின் பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படத்திற்காக இவர் சிறந்த நடிகைக்கான என்ற விருதையும் பெற்றார்.

ரசிகர்கள் பூரிப்பு

ரசிகர்கள் பூரிப்பு

கொரோனா லாக்டவுன் பல மாதங்களாக நீடித்து கொண்டே வரும் வேளையில் இந்த ஆண்டு படப்பிடிப்புகளும் மேலும் எந்த ஒரு சினிமாத்துறை சார்ந்த வேலைகளும் சரிவர நடக்காத வருத்தத்தில் எல்லோரும் இருந்துவரும் நிலையில் இவர் பயங்கரமாக பீல் பண்ணி இன்ஸ்டாகிராமில் போட்டோ பதிவிற்கு ரசிகர்கள் அவர்களது ஆதரவை அள்ளி தந்து வருகின்றனர். அந்த பதிவில் "எனக்கு இந்த 2020 ஆம் ஆண்டு திரும்ப வேண்டும்" என்ற தலைப்பை பதிவிட்டு மேலும் தனது அழகான புகைப்படம் ஒன்றையும் அதனுடன் இணைத்துள்ளார். இந்த பதிவிற்கு ரசிகர்கள் பலரும் ஆதரவு தந்து வரும் வேலையில், பாடகர் சித் ஸ்ரீராம் அதனை நானும் ஒப்புக் கொள்கிறேன் எனக்கும் இந்த ஆண்டு திரும்ப வேண்டும் என கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X