‘வண்ணாரப்பேட்டையில’பாடலுக்கு அதிதி ஷங்கரின் அட்டகாசமாக டான்ஸ்.. குவியும் லைக்ஸ்!

சென்னை: பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் இளைய மகள் அதிதி ஷங்கர் கலக்கலான ஆட்டத்தைப் பார்த்து ரசிகர்கள் மெய்மறந்து போனார்கள்.

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் தன் மகளை மருத்துவராக பார்க்க ஆசைப்பட்டார். ஆனால் மகளோ, மருத்துவம் படித்து விட்டு ஹீரோயினாக ஆக வேண்டும் என்று ஆசையை அப்பாவிடம் சொல்லிவிட, மகளின் ஆசையை நிறைவேற்றி விட்டார் ஷங்கர்.

Actress Aditi shankar dance video trending on social media

முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்த விருமன் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான அதிதி , தற்போது இரண்டாவது படத்திலும் நடித்து வருகிறார்.

அதிதி ஷங்கர்: நடிகர் கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான விருமன் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் அதிதி. இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.விருமன் திரைப்படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்திருந்திருந்தது. இந்த படத்தில் தேன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அதிதி.

விருமன் படத்தில்: இந்த படத்தில் ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், வடிவுக்கரசி, சரண்யா, கருணாஸ், சூரி உட்பட பலர் நடித்தனர். முதல் படத்திலேயே ஹீரோயினாக நடித்தது மட்டுமில்லாமல், யுவன் ஷங்கர் ராஜா இசையில், அவருடன் இணைந்து மதுரை வீரர் அழகுல என்ற பாடலை பாடி பாடகியாகவும் மாறினார்.

மாவீரன்: தற்போது அதிதி ஷங்கர் சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். மண்டேலா படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இப்படத்தி இயக்கி வருகிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து அதிதி வண்ணாரப்பேட்டையில என்ற டூயட் பாடலை பாடி உள்ளார். இந்த பாடலை படக்குழு அண்மையில் வெளியிட்ட நிலையில் தற்போது இந்த பாடல் பிரபலமாகி வருகிறது.

வண்ணாரப்பேட்டையில: இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கருக்கு சோஷியல் மீடியாவில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். அவரது குறும்புத்தனமான பேச்சு மற்றும் புன்னகைக்கு ரசிகர்கள் ஏராளம். அதிதி ஷங்கர் ஒரு போட்டோ போட்டாலே டிரெண்டாக்கி வருகின்றனர். தற்போது, இவர் மாவீரன் படத்தில் வரும் வண்ணாரப்பேட்டையில பாடலுக்கு அட்டகாசமாக ஆட்டம் போட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் குரலில் மட்டும் குயில் இல்லை,ஆட்டத்திலும் மயில் என்று கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X