ஆஜா சனம் மதுர் சாந்தினி மே ஹம்..பிரபல பாட்டுக்கு டான்ஸ் ஆடி அசத்திய அதிதி ஷங்கர்..வேறலெவல் வீடியோ!

சென்னை : பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் இளைய மகள் அதிதி ஷங்கர் குட்டை உடையில் போட்ட ஆட்டத்தைப்பார்த்து ரசிகர்கள் மெய்மறந்து போனார்கள்.

மகளை மருத்துவராக பார்க்க ஆசைப்பட்டார் ஷங்கர், ஆனால் மகளோ, மருத்துவம் படித்து விட்டு ஹீரோயினாக ஆக வேண்டும் என்று ஆசை அப்பாவிடம் சொல்விட, மகளின் ஆசை நிறைவேற்றி விட்டார் ஷங்கர்.

முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்த விருமன் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான அதிதி , தற்போது இரண்டாவது படத்திலும் நடித்து வருகிறார்.

Actress aditi shankar dancing Video trending on social media

அதிதி ஷங்கர் : நடிகர் கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி வெளியான விருமன் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் அதிதி. இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.விருமன் திரைப்படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்திருந்திருந்தது. இந்த படத்தில் தேன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அதிதி.

விருமன் படத்தில் : இந்த படத்தில் ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், வடிவுக்கரசி, சரண்யா, கருணாஸ், சூரி உட்பட பலர் நடித்தனர். முதல் படத்திலேயே ஹீரோயினாக நடித்தது மட்டுமில்லாமல், யுவன் ஷங்கர் ராஜா இசையில், அவருடன் இணைந்து மதுரை வீரர் அழகுல என்ற பாடலை பாடகியாகவும் மாறினார். சினிமாவில் வந்தமே இவ்வளவு பிரபலமாவது ஷங்கரின் மகள் என்பதால் என்றேல்லாம் சலசலப்பு எழுந்தது.

Actress aditi shankar dancing Video trending on social media

குட்டி கவுனில் : இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கருக்கு சோஷியல் மீடியாவில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். அவரது குறும்புத்தனமான பேச்சு மற்றும் புன்னகைக்கு ரசிகர்கள் ஏராளம். அதிதி ஷங்கர் ஒரு போட்டோ போட்டாலே டிரெண்டாக்கி வருகின்றனர். தற்போது, இவர் சிவப்பு நிற குட்டி கவுனில், ஜெயலலிதாவுக்கு மிகவும் பிடித்த பாடலான ''ஆஜா சனம் மதுர் சாந்தினி'' பாடலுக்கு ஆட்டம் போட்டுள்ளார் இந்த வீடியோவிற்கு மலைபோல் லைக்குள் குவிந்து வருகின்றன.

மாவீரன் படத்தில் : அதிதி ஷங்கர் அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்து வருகிறார். மண்டேலா படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இப்படத்தி இயக்கி வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங்கின் போது அஸ்வினுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையே கருத்து மோதல் ஆரம்பம் முதலே உருவாகி வந்ததாக தகவல் வெளியானது. மேலும், மாவீரன் திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X