Aditi shankar: தம்பியை தொடர்ந்து அண்ணனுடன் இணையும் அதிதி ஷங்கர்.. அட இவர்தான் டைரக்டரா!

சென்னை: நடிகை அதிதி ஷங்கர் பிரபல இயக்குநர் ஷங்கரின் மகள் மற்றும் மருத்துவர் என்ற பல சிறப்பம்சங்களை கொண்டவர். தமிழில் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். விருமன் படத்தில் கார்த்தியுடன் இணைந்து இவரது என்ட்ரி அமைந்தது. இந்தப்படம் மிகச்சிறப்பான வெற்றியை பெற்றுத் தந்த நிலையில் அடுத்தடுத்த படங்களில் இணைந்து நடித்து வருகிறார். கடந்த ஆண்டில் சிவகார்த்திகேயனுடன் அதிதி இணைந்து நடித்த மாவீரன் படமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்தப் படங்களின் வெற்றி அடுத்தடுத்த படங்களை அதிதிக்கு பெற்றுத்தந்து வருகிறது.

தற்போது விஷ்ணு வர்தன் இயக்கத்தில் உருவாகிவரும் படத்தில் மறைந்த நடிகர் முரளியின் மகன் ஆகாஷ் முரளியுடன் இணைந்து நடித்து வருகிறார். இந்தப் படத்தின்மூலம் ஆகாஷ் முரளி தமிழில் ஹீரோவாக என்ட்ரி ஆகிறார். இந்தப் படங்களை தொடர்ந்து லைகா நிறுவனத்துடனும் நாயகியை மையமாக வைத்து உருவாகவுள்ள ஒரு படத்திலும் அதிதி கமிட்டாகியுள்ளார். இந்தப் படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது. இந்நிலையில் இயக்குநர் எம் ராஜேஷ் இயக்கத்திலும் அதிதி ஷங்கர் அடுத்தப்படத்தில் கமிட்டாகியுள்ளார். இந்தப் படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Actress Aditi shankar going to join in Atharvaa -M Rajesh combination movie

அதிதி ஷங்கர்: பிரபல இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர், கார்த்தியுடன் இணைந்து விருமன் படத்தின்மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்தவர். இந்தப் படத்தில் கிராமத்து கெட்டப்பில் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்த அதிதிக்கு படம் சிறப்பாக கைக்கொடுத்தது. தொடர்ந்து அடுத்தடுத்த முன்னணி ஹீரோக்கள் மற்றும் இயக்குநர்களுடன் இணைந்து நடித்துவருகிறார் அதிதி. கடந்த ஆண்டில் சிவகார்த்திகேயனுடன் அதிதி நடித்து வெளியான மாவீரன் படமும் அதிதிக்கு சிறப்பாக அமைந்தது. இந்தப் படத்திலும் தன்னுடைய இயல்பான நடிப்பால் அனைத்து தரப்பினரையும் கவர்ந்திருந்தார்.

விஷ்ணு வர்தன் இயக்கத்தில் அதிதி: இந்நிலையில் தற்போது பிரபல இயக்குநர் விஷ்ணு வர்தன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் மறைந்த நடிகர் முரளியின் இளையமகன் ஆகாஷ் ஜோடியாக நடித்து வருகிறார். இந்தப் படத்தின்மூலம் ஆகாஷ் நடிகராக அறிமுகமாகிறார். அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகிவரும் அதிதி அடுத்ததாக லைகா நிறுவனத்தின் படம் ஒன்றிலும் நடிக்கவுள்ளார். நாயகியை மையப்படுத்தி உருவாகவுள்ள இந்தப் படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. இதனிடையே பிரபல இயக்குநர் எம் ராஜேஷ் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகவுள்ள புதிய படத்திலும் அதிதி நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதர்வா படத்தில் ஜோடி: இந்தப் படத்தில் நடிகர் அதர்வா லீட் கேரக்டரில் நடிக்கவுள்ளார். எப்போதும் காமெடி என்டர்டெயின்மெண்டை மையமாக கொண்டு படங்களை இயக்கிவரும் எம் ராஜேஷ் முன்னதாக சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார். தற்போது ஜெயம் ரவி லீட் கேரக்டரில் நடித்துவரும் பிரதர் படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தை தொடர்ந்தே அதர்வா -அதிதி ஷங்கர் காம்பினேஷனில் அவர் புதிய படத்தை இயக்குவார் என்று கூறப்படுகிறது. விரைவில் இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

தம்பியை தொடர்ந்து அண்ணனுக்கு ஜோடி: தம்பி ஆகாஷிற்கு ஜோடியாக நடித்துள்ள அதிதி அடுத்ததாக அண்ணன் அதர்வாவிற்கு ஜோடியாகவுள்ளது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. நடிகையாக மட்டுமில்லாமல் பாடகியாகவும் அடுத்தடுத்த சூப்பர்ஹிட் பாடல்களை விருமன் மற்றும் மாவீரன் படங்களில் பாடியுள்ளார் அதிதி ஷங்கர். மருத்துவர், நடிகை, பாடகி என பன்முகத்திறமை காட்டிவரும் அதிதி ஷங்கர், தொடர்ந்து அடுத்தடுத்த வெற்றிப் படங்களை கொடுப்பார் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X