Aditi shankar: முன்னணி நடிகர்களுடன் நடித்த அதிதி ஷங்கர்.. அடுத்தப்பட ஹீரோ யாரு தெரியுமா?
சென்னை: பிரபல இயக்குநர் ஷங்கரின் மகள் என்ற அடையாளத்துடன் கோலிவுட்டில் களமிறங்கினார் அதிதி ஷங்கர். முதல் படத்திலேயே கார்த்தியின் ஜோடியாக விருமன் என்ற படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்திருந்தார். அடுத்ததாக சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்திலும் மாஸ் காட்டினார். இந்த இரு படங்களிலும் அவர் பாடல்களையும் பாடியுள்ளார்.
அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்திருந்த அதிதி ஷங்கர், கோலிவுட்டில் ஒரு வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்த அளவில் அதிதிக்கு பட வாய்ப்புகள் இல்லாத நிலையே காணப்படுகிறது. இந்நிலையில் அடுத்ததாக விஷ்ணுவர்தன் இயக்கத்தில் உருவாகியுள்ள நேசிப்பாயா படத்தில் ஆகாஷ் முரளிக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்துள்ளார்.

நடிகை அதிதி ஷங்கர்: பிரம்மாண்டங்களின் இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் தன்னுடைய முதல் படத்திலேயே நடிகர் கார்த்தியுடன் விருமன் படத்தில் நடித்து மாஸ் காட்டினார். முதல் படத்திலேயே ரசிகர்களை கவரும் வகையில் பாடலும் பாடினார் .இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மாவீரன் படத்திலும் களம் இறங்கினார். இந்த படங்கள் அடுத்தடுத்து அதிதிக்கு அதிகமான பட வாய்ப்புகளை பெற்று தரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் இல்லாத நிலையே காணப்படுகிறது. தற்போது விஷ்ணுவர்தன் இயக்கத்தில் உருவாகியுள்ள நேசிப்பாயா என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.
அர்ஜுன் தாசுடன் இணைந்த அதிதி: நேசிப்பாயா படத்தில் மறைந்த நடிகர் முரளியின் இளைய மகன் ஆகாஷுக்கு ஜோடியாக அதிதி நடித்துள்ளார். இந்த படத்தின் டைட்டில் இரு தினங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில் விரைவில் இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் குட்நைட் படத்தை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் அடுத்த படத்தில் அதிதி ஷங்கர் நாயகியாக நடிக்க கமிட்டாகியுள்ளார் படத்தை அறிமுக இயக்குனர் விக்னேஷ் இயக்கவுள்ள சூழலில் நடிகர் அர்ஜுன் தாஸ் இந்த படத்தில் நாயகனாக நடிக்கவுள்ளார்.
இம்மாதம் துவங்கும் சூட்டிங்: இந்தப் படத்தின் சூட்டிங் அடுத்தமாதம் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தற்போது தயாரிப்பாளர் ஸ்டிரைக் நடக்கவுள்ளதாக கூறப்படும் சூழலில் இந்த மாதத்திலேயே இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கப்பட்டுள்ளது. மலையாளத்தில் ஹிருதயம் மற்றும் தெலுங்கில் உருவான குஷி, ஹாய் நானா உள்ளிட்ட படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றிய ஹெஷாம் அப்துல் வஹாப் இந்தப் படத்தில் இசையமைப்பாளராக இணைந்துள்ளார். மலையாளம், தெலுங்கு மொழிகளில் ரசிகர்களை ஈர்த்துள்ள இவர் தமிழிலும் சாதனை மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கலாம்.
படவாய்ப்புகள் குறைந்த அதிதி: குட்நைட் படம் மூலம் மிகச்சிறப்பான கதையை கொடுத்த மில்லியன் டாலர் நிறுவம் இந்தப் படத்திலும் வித்தியாசமான காம்பினேஷனுடன் களமிறங்கவுள்ளது. இந்தப் படமும் ரசிகர்களை சிறப்பாக கவரும் என்று எதிர்பார்க்கலாம். இதனிடையே, விருமன், மாவீரன் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த நடிகை அதிதி சங்கர், அடுத்தடுத்து ஆகாஷ் முரளி, அர்ஜுன் தாஸ் என இளம் நடிகர்களுடன் இணைந்து வருவதும் கோலிவுட்டில் கவனத்தை பெற்று வருகிறது. இந்தப் படங்கள் அவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகளை பெற்றுத்தரும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











