ஷங்கர் மகளின் ஹல்தி கொண்டாட்டம்.. மஞ்ச காட்டு மைனா போல் ஜொலித்த நடிகை அதிதி ஷங்கர்!

சென்னை: இயக்குநர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யாவின் திருமணம் மற்றும் வரவேற்பு பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்த நிலையில், ஐஸ்வர்யாவின் ஹல்தி கொண்டாட்ட புகைப்படங்களை தங்கை அதிதி ஷங்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த போட்டோவிற்கு இணையத்தில் லைக்குகள் குவிந்து வருகிறது.

இயக்குநர் ஷங்கரின் மூத்த மகளான ஐஸ்வர்யா ஷங்கருக்கு, கடந்த 2022ம் ஆண்டு புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோஹித்திற்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களின் திருமணம் கொரோனா காலகட்டத்தில் நடந்ததால், ஒருசிலர் மட்டுமே கலந்து கொண்டனர். கொரோனா தளர்வுக்கு பின் பிரம்மாண்டமாக வரவேற்பு நடத்த ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில், ஒரு சில காரணங்களால், ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா, கணவர் ரோகித்தை விட்டு பிரிந்து தந்தை வீட்டுக்கே திரும்பிவிட்டார்.

Actress Aditi shankar shared sister Aishwarya s haldi function photos and video

இரண்டாம் திருமணம்: இதையடுத்து, ஆறு மாதம் கூட சேர்ந்து வாழாத ஐஸ்வர்யாவை நினைத்து வேதனைப்பட்ட ஷங்கர், தனது மகளுக்கு முறையாக விவாகரத்தை பெற்று, தருண் கார்த்திகேயன் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து வைத்தார். இந்த திருமணத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விக்ரம், சூர்யா, கார்த்திக், மணிரத்னம், சுஹாசினி, நயன்தாரா, விக்னேஷ் சிவன் என ஒட்டுமொத்த திரைப்பிரபலங்களும் திரண்டு வந்து மணமக்களை வாழ்த்தினார்கள்.

Actress Aditi shankar shared sister Aishwarya s haldi function photos and video

ஹல்தி கொண்டாட்டம்: இந்நிலையில், அதிதி ஷங்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனது அக்கா ஐஸ்வர்யாவின் ஹல்தி கொண்டாட்ட போட்டோக்களை ஷேர் செய்துள்ளார். ஹல்தி பக்ஷனில் ஒட்டுமொத்த குடும்பமும் மஞ்சள் உடையில் ஜொலிக்கின்றனர். இதில் குறிப்பாக அதிதி ஷங்கர், மஞ்ச காட்டு மைனா போல் ஜொலி ஜொலிப்பாக இருந்தார். இந்த போட்டோவிற்கு இணையத்தில் லைக்குள் குவிந்து வருகின்றன.

Actress Aditi shankar shared sister Aishwarya s haldi function photos and video

பத்திரிக்கையாளர்களுக்கு விருந்து: மேலும், மகளின் திருமணம் முடிந்த கையோடு செய்தியாளர்களுக்கு நடிகர் ஷங்கர் விருந்து வைத்தார். அதில், ஷங்கர், என் இத்தனை ஆண்டு வளர்ச்சிக்கு நீங்க தான் காரணம், அனைவரும் மணமக்களை வாழ்த்துங்கள் என்றார். இதையடுத்து பேசிய ஷங்கரின் மருமகன் தருண் கார்த்திக், தான் உதவி இயக்குநர் இல்லை, அமெரிக்காவில் ஒரு சாஃப்ட்வேர் இஞ்ஜினியராக பணியாற்றி வருவதாக கூறினார். சினிமா மீது அதிக ஆர்வம் இருப்பதாக தருண் பேசி இருந்தார். கூடிய விரைவில் இவரை இயக்குநராகவோ, நடிகராகவோ பார்க்க அதிக வாய்ப்பு உள்ளது.

Actress Aditi shankar shared sister Aishwarya s haldi function photos and video

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X