Aditi shankar: இந்த உலகத்திலேயே பிடித்தமான இருவர்.. வீடியோ வெளியிட்ட அதிதி ஷங்கர்!

சென்னை: நடிகை அதிதி ஷங்கர் பிரபல நடிகை, பாடகி மட்டுமில்லாமல் மருத்துவரும்கூட. பிரபல இயக்குநர் ஷங்கரின் மகள் என்ற அடையாளம் இருந்தபோதிலும் தன்னுடைய தனிப்பட்ட திறமையால் அடுத்தடுத்து கார்த்தி, சிவகார்த்திகேயன் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள இவர் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார். அடுத்ததாக விஷ்ணு வர்தன் இயக்கத்திலும் நடித்து முடித்துள்ளார். விருமன், மாவீரன் படங்களில் அடுத்தடுத்து பாடல்களையும் பாடி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார் அதிதி ஷங்கர். அடுத்தடுத்த இரு படங்களை இவர் கைவசம் வைத்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிதியின் அக்காவின் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. உதவி இயக்குநர் தருண் கார்த்திகேயனுடன் இவருக்கு நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக கிரிக்கெட் வீரர் ரோஹித்துடன் இவருக்கு நடந்த திருமணம் விவாகரத்தில் முடிந்த நிலையில் தற்போது இரண்டாவது திருமணம் நிச்சயக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலக்கலாக கலந்துக் கொண்டார் அதிதி. மணப்பெண்ணை போலவே இவரது கெட்டப்பும் அதிகமானவர்களை கவர்ந்தது. இந்த நிகழ்ச்சி குறித்த அடுத்தடுத்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார்.

Actress Aditi shankar shared photos with her sister and brother in Instagram

நடிகை அதிதி ஷங்கர்: நடிகை அதிதி ஷங்கர் கோலிவுட்டில் அடுத்தடுத்த வெற்றிப்படங்களை கொடுத்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளார். நடிகர் கார்த்தியுடன் கிராமத்து கெட்டப்பில் விருமன் என்ற படத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்த அவர், அடுத்த படத்திலேயே சிவகார்த்திகேயன் ஜோடியாக மாவீரன் படத்தில் நடித்திருந்தார். கடந்த ஆண்டில் வெளியான இந்தப் படமும் வெற்றிப்படமாக அமைந்தது. இந்தப் படங்களை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் அதிதி. முன்னதாக விருமன், மாவீரன் படங்களில் பாடல்களையும் பாடி ரசிகர்களை அதிகமான அளவில் கவர்ந்துள்ளார்.

அதிதி அக்கா ஐஸ்வர்யா: மருத்துவரான அதிதி ஷங்கருக்கு நடிப்பில்தான் அதிக ஆர்வம் இருந்ததாம். தன்னுடைய தந்தையின் விருப்பத்தை பூர்த்தி செய்யும்வகையில் மருத்துவராகவும் ஆன அதிதி, பட்டத்தை பெற்ற கையோடு நடிக்க வந்து விட்டார். இவரது அக்கா ஐஸ்வர்யாவும் டாக்டர்தான். இவருக்கும் கிரிக்கெட் வீரர் ரோஹித்துக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆன நிலையில், இருவருக்கும் இடையில் மனக்கசப்பு ஏற்பட்டு பிரிந்தனர். இந்நிலையில் தற்போது உதவி இயக்குநர் தருண் கார்த்திகேயனுடன் ஐஸ்வர்யாவிற்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.

Actress Aditi shankar shared photos with her sister and brother in Instagram

உற்சாகத்தில் அதிதி ஷங்கர்: இதனால் அதிதி ஷங்கர் மிகுந்த உற்சாகத்தில் உள்ளார். தன்னுடைய அக்காவின் நிச்சயதார்த்த புகைப்படங்கள், வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் அதிகமான அளவில் பகிர்ந்துள்ளார். தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களில் இந்த உலகத்திலேயே தனக்கு மிகவும் பிடித்தமானவர்கள் என்று தன்னுடைய அக்கா ஐஸ்வர்யா மற்றும் தம்பி ஆர்ஜித்துடன் தான் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். மேலும் நிச்சயதார்த்த நிகழ்ச்சியின் கலக்கல் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். முன்னதாக இந்த நிகழ்ச்சிக்காக தான் ரெடியான புகைப்படங்களையும் பகிர்ந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.

அடுத்தடுத்த பகிர்வுகள்: இன்ஸ்டாகிராமில் அதிதியை 10 லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் பாலோ செய்து வருகின்றனர். அடுத்தடுத்த போட்டோஷுட்களை எடுத்து அதன் புகைப்படங்களை தொடர்ந்து பகிர்ந்து வருகிறார் அதிதி ஷங்கர். அந்த வகையில் பாரம்பரிய மற்றும் நவீன உடைகளில் அடுத்தடுத்த புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். அடுத்தடுத்த டான்ஸ் வீடியோக்கள், பாடல் வீடியோக்கள், விளம்பர வீடியோக்கள், விருது பெற்ற நிகழ்வுகள் என தொடர்ந்து பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X