மொத்த அழகையும் கொத்தாக காட்டிய ஐஸ்வர்யா தத்தாவின் லேட்டஸ்ட் கவர்ச்சி போட்டோ ஷூட் புகைப்படங்கள்!
சென்னை: தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமான நடிகையாக உள்ளவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா.
தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், சத்ரியன், பாயும் புலி உள்ளிட்ட படங்களில் இவர் நடித்துள்ளார்.
மிளிர்,பொல்லாத உலகில் பயங்கர கேம், கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா தத்தா இப்பொழுது மொத்த அழகையும் கொத்தாக காட்டியவாறு செம ஹாட் போட்டோ ஷூட் நடத்திக் இணையதளத்தை தெறிக்க விட்டுள்ளார்.

நேச்சுரல் நடிப்பை
தற்போது தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமாக உள்ளவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. நகுல்,அட்டகத்தி தினேஷ் ஹீரோவாக நடித்த தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழில் அறிமுகமானார். முதல் படத்தில் சாதுவான பெண்ணாக நேச்சுரல் நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை வெகுவாக கவர்ந்த பிறகு அதைத் தொடர்ந்து கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்புகள் பெரிதாக கிடைக்கவில்லை. இந்தநிலையில் தங்கையாக நடிக்க ஒரு சில வாய்ப்புகள் வந்தது அந்த வகையில் பாயும் புலி மற்றும் சத்ரியன் உள்ளிட்ட படங்களில் தங்கை வேடங்களில் நடித்து வந்தார்

லட்சக்கணக்கில் ஓட்டுக்கள்
மிக க்யூட்டான நடிகையாக இருந்த போதும் தமிழ் சினிமாவில் தொடர்ந்து இவருக்கு வாய்ப்புகள் கிடைக்காததால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கி அதிரடி காட்டினார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு அதிரடியான ஆட்டத்தின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இவருக்கு லட்சக்கணக்கில் ஓட்டுக்கள் கிடைத்தது. ரசிகர்களின் பெரும் ஆதரவால் இறுதி சுற்று வரை சென்று ரன்னர் அப் ஆனார்.

வாய்ப்புகள் கிடைக்கவில்லை
பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் பலருக்கும் அதன்பிறகு வாய்ப்புகள் தொடர்ந்து வரும் ஆனால் ஐஸ்வர்யா தத்தாவுக்கு எதிர்பார்த்த அளவிற்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சியில் தன்னுடன் சக போட்டியாளராக இருந்த மஹத்துடன் இணைந்து கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா என்ற படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமானார். இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு அதன்பிறகு எந்த ஒரு அப்டேட்டும் இதுவரை வெளியாகவில்லை.

ஹாட்டாக போட்டோ ஷூட்
நடிகர் ஆரியுடன் இணைந்து நடித்துள்ள அலெகா திரைப்படம் மட்டும் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. மேலும் மிளிர்,பொல்லாத உலகில் பயங்கர கேம் உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் படங்களில் கவர்ச்சியாகவும் நடிக்க தயார் என அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இயக்குனர்களின் கவனத்தை ஈர்த்து வரும் ஐஸ்வர்யா தத்தா இப்பொழுது மொத்த அழகையும் கொத்தாக காட்டி செம ஹாட்டாக போட்டோ ஷூட் நடத்தியுள்ள லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளது வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











