தமிழ், கன்னடம் ஒர்க் அவுட் ஆகலை.. அங்க எப்படி இருக்குமோ வரவேற்பு? தெலுங்கு கற்கும் பிரபல ஹீரோ மகள்!
சென்னை: தெலுங்கில் அறிமுகமாக இருப்பதால், அந்த ஹீரோவின் மகள் தெலுங்கு கற்று வருவதாகக் கூறப்படுகிறது.
தமிழ், கன்னடத்தைத் தொடர்ந்து தெலுங்கில் தனது மகளை ஹீரோயினாக்க முடிவு செய்துள்ளார் நடிகர் அர்ஜுன்.
ஆக்ஷன் கிங் என்று அழைக்கப்படும் இவர், இப்போது தனக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டர் ரோல்களில் நடித்து வருகிறார். இவரது மூத்த மகள் ஐஸ்வர்யா.

விஷால் ஜோடியாக
இவர் தமிழில், 'பட்டத்து யானை' படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இந்தப் படம் 2013 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. விஷால் ஹீரோவாக நடித்திருந்தார். நடிகர் விஷால், அர்ஜூனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் சந்தானம், முரளி சர்மா, ஜான் விஜய், சுப்பு பஞ்சு உட்பட பலர் நடித்திருந்தனர்.

அர்ஜுன் இயக்கம்
பூபதி பாண்டியன் இயக்கி இருந்தார். இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
இதையடுத்து அவர் 'சொல்லிவிடவா' என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தார். இதை நடிகர் அர்ஜுன் தயாரித்து, இயக்கி இருந்தார். சந்தன் குமார் ஹீரோவாக நடித்திருந்தார். மற்றும் சுகாசினி, பிரகாஷ்ராஜ், கே.விஸ்வநாத் உட்பட பலர் நடித்திருந்

தெலுங்கு அறிமுகம்
இந்தப் படம் கன்னடத்திலும் வெளியானது. 2018 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படமும் பெரிதாகப் பேசப்படவில்லை. இதற்குப் பிறகு படங்களில் நடிக்காமல் இருந்தார் ஐஸ்வர்யா அர்ஜுன். இந்நிலையில் மகள் ஐஸ்வர்யாவை தெலுங்கில் அறிமுகப்படுத்த இருக்கிறார் அர்ஜுன். இந்தப் படத்தை அவரே இயக்க உள்ளதாகக் கூறப்பட்டது.

பயிற்சி
தெலுங்கு தயாரிப்பு நிறுவனம் ஒன்றுடன் இணைந்து அர்ஜூனே தயாரிக்க இருப்பதாகவும் தெலுங்கு இளம் ஹீரோவை நடிக்க அணுகி இருப்பதாகவும் தகவல்கள் முன்பு வெளியாயின. இந்நிலையில், நடிகர் அர்ஜூன் இந்தப் படத்தை மே மாதம் தொடங்க இருப்பதாகவும் தெலுங்கில் சரளமாக பேச நடிகை ஐஸ்வர்யா அர்ஜூன் பயிற்சி எடுத்து வருவதாகவும் இப்போது கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











