வரிக்குதிரை மாதிரி பேண்ட் சட்டையில் ஜோரா போஸ் கொடுக்கும் பிக் பாஸ் பிரபலம்!

சென்னை : பல திரைப் படங்களில் நடித்திருந்தாலும் பிக்பாஸ் மூலம் ஐஸ்வர்யா தத்துக்கு கிடைத்த புகழ் என்பது எக்கச்சக்கமானது.

பெண்களை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இஷ் என்ற ஆந்தாலஜி திரைப்படத்தில் நான்கு கதாநாயகிகள் நடிக்க அதில் ஒருவராக ஐஸ்வர்யா தத்தா நடிக்கிறார்.

பலரும் வியந்து போகும் அளவிற்கு போட்டோ ஷூட்டில் கலக்கி வரும் ஐஸ்வர்யா இப்பொழுது வரிக்குதிரை மாதிரி பேண்ட் சட்டையில் செம கலக்கலாக போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

மோஸ்ட் வான்டட் கன்டஸ்டன்ட்

மோஸ்ட் வான்டட் கன்டஸ்டன்ட்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு பின்பு பிரபலங்கள் பலர் ஜொலித்துக் கொண்டிருக்கும் நிலையில் அவ்வாறு பிக் பாஸ் சீசன் 3 இல் மோஸ்ட் வான்டட் கன்டஸ்டன்டாக இருந்த நடிகை ஐஸ்வர்யா தத்தா ரன்னர் அப் கோப்பையை தட்டிச் சென்று இப்பொழுது எக்கச்சக்கமான திரைப்படங்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறார்.

டிரைலர் வெளியாகி

டிரைலர் வெளியாகி

2018 ஆம் ஆண்டு வெளியான மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன என்ற திரைப்படத்திற்கு பிறகு இதுவரை எந்த ஒரு திரைப்படமும் ஐஸ்வர்யாவுக்கு வெளியாகாததால் இந்த வருடம் கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா, அலேகா, மிளிர், கன்னித்தீவு என எக்கச்சக்கமான திரைப்படங்கள் வெளியாக இருக்க சமீபத்தில் அலேகா திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

நான்கு நடிகைகள்

நான்கு நடிகைகள்

சமூகத்தில் பெண்களுக்கு நடக்கக்கூடிய அவலங்களை எடுத்துரைக்கும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு படங்கள் வந்திருந்தாலும் இப்போது நான்கு கதாநாயகிகள் ஒன்றிணைந்து நடித்திருக்கும் இஷ் என்ற ஆந்தாலஜி திரைப்படத்தில் ஐஸ்வர்யா தத்தா, சோனியா அகர்வால், இனியா, க்ரிஷா குருப் என நான்கு நடிகைகள் நான்கு விதமான கதைகளில் நடித்து வருகின்றனர். சமீபத்தில் இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணைய தளத்தில் சக்கை போடு போட்டது.

வரிக்குதிரை மாதிரி

வரிக்குதிரை மாதிரி

கிட்டத்தட்ட 8 வருடங்களுக்கு மேலாக திரைத்துறையில் ஐஸ்வர்யா தத்தா பயணித்துக் கொண்டு இருந்தாலும் இதுவரை முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்காததால் அதற்காக பல்வேறு போட்டோ ஷூட் நடத்தி வருகிறார். ஏற்கனவே இவரின் பல கவர்ச்சியான புகைப்படங்கள் இணையதளத்தை தெறிக்க விட்ட நிலையில் இப்பொழுது பேண்ட் சட்டையில் செம கெத்தாக நின்றுக்கொண்டு பல்வேறு கோணங்களில் போஸ் கொடுத்தவாறு முன்னழகு அற்புதமாக பெரிய செம ஸ்டைலிஷாக இருக்கும் ஐஸ்வர்யா தத்தாவின் இந்த லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையதளத்தை மீண்டுமொருமுறை தெறிக்க விடுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X