மேடையில் கண்ணீர் விட்டு அழுத ஐஸ்வர்யா லட்சுமி..ஓடிவந்து தேற்றிய சாய் பல்லவி !

சென்னை : கார்கி பட விழாவில் பேசிய நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, மிகுந்த உணர்ச்சிவசப்பட்டு மேடையில் கதறி அழுதார்.

நடிகையாக இருந்த ஐஸ்வர்யா லட்சுமி, பிளாக்கி ஜெனி & மை லெஃப்ட் ஃபூட் புரொடெக்ஷன்ஸ் சார்பில் ராமச்சந்திரன், தாமஸ் ஜார்ஜ் ஆகியோருடன் இணைந்து இப்படத்தை தயாரித்து, தயாரிப்பாளராகி உள்ளார்.

நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் ஜூலை 15ஆம் தேதி இத்திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிடுகிறது. இப்படத்திற்கு கோவிந்தா இசையமைத்துள்ளார்.

கார்கி

கார்கி

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்த நடிகை சாய் பல்லவி, தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக வளர்ந்து வருகிறார். இவர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம் தான் கார்கி. கார்கி என்கிற பெண்ணுக்கும் அவளுடைய தந்தைக்கும் இடையிலான பயணமாக இந்தப் படத்தின் கதை அமைந்துள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில் இத்திரைப்படம் வெளியாக உள்ளது.

கதறி அழுத நடிகை

கதறி அழுத நடிகை

நிவின் பாலி நடித்த ரிச்சி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான கௌதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் சாய் பல்லவி, காளி வெங்கட் நடித்துள்ள கார்கி படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நேற்று நடந்தது. இதில் முக்கிய வேடத்தில் நடித்ததுடன், படத்தின் இணை தயாரிப்பு பொறுப்பேற்றுள்ள ஐஸ்வர்யா லட்சுமி மேடையில் பேச வந்தபோது, வார்த்தைகள் வராமல் கதறி அழுதார். உடனே சாய் பல்லவி ஓடிவந்து அவரைக் கட்டியணைத்து தேற்றினார்.

பல பிரச்சனைகள்

பல பிரச்சனைகள்

பிறகு ஐஸ்வர்யா லட்சுமி பேசுகையில், கௌதம் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இந்த கதைபற்றி என்னிடம் பேசினார். இந்த படத்தை எப்படியாவது படமாக்க வேண்டும் என்று நினைத்தேன். மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழில் சில படங்களில் நடித்துள்ளேன். அதில் வந்த பணத்தைக் கொண்டு கார்கி படத்தை தயாரித்துள்ளேன். சாய் பல்லவி இந்த படத்திற்கு மிகவும் பொருத்தமானவராக இருக்கிறார். இப்படத்தை உருவாக்கி முடிப்பதற்குள் ஏகப்பட்ட பிரச்சனைகளை சந்தித்தேன். அதை நினைத்தாலே இப்போதும் பயமாக இருக்கிறது. அதனால் வந்த ஆனந்த கண்ணீர் தான் அது என்றார்.

பல படங்கள் கைவசம்

பல படங்கள் கைவசம்

தமிழில் ஆக்‌ஷன், ஜகமே தந்திரம், புத்தம் புது காலை விடியாதா என்ற ஆந்தாலஜி திரைப்படத்திலும் நடித்துள்ளார். மணிரத்னத்தின் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், கேப்டன், கட்டா குஸ்தி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். 'கார்கி' படம் வரும் 15ம் தேதியும் திரையில் வெளியாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X