நடுக்காட்டில் போட்டோ ஷூட் நடத்திய தனுஷ் பட நடிகை!
கொச்சி : தனுஷின் ஜகமே தந்திரம் படத்தில் நடித்திருக்கும் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி இப்பொழுது நடுக்காட்டில் ரம்மியமான போட்டோஷூட் நடத்தியுள்ளார்.
மலையாளத்தில் பிரபலமான இளம் நடிகையாக உள்ள இவர் இப்பொழுது தமிழில் சில திரைப்படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கும் பரிச்சயமாகி வருகிறார்.
ஜகமே தந்திரம் விரைவில் ஓடிடியில் நேரடியாக வெளியாக இருக்கும் நிலையில் அதைத்தொடர்ந்து முன்னணி இயக்குனர் ஒருவரின் படத்தில் ஒப்பந்தமாகி இருக்கும் ஐஸ்வர்யா லட்சுமி இப்பொழுது நடுக்காட்டில் கோல்டன் டிரஸ்ஸில் கவர்ச்சி காட்டியவாறு போட்டோஷூட் நடத்தி அதகளம் செய்து வருகிறார்.

மலையாள ரசிகர்களை
பிரபல மலையாள இளம் நடிகர் டோவினோ தாமஸின் ஒவ்வொரு படங்களும் மலையாள ரசிகர்களை மட்டுமல்லாமல் தமிழ் ரசிகர்களின் கவனத்தை பெற்றால். அந்த வகையில் 2017 ஆம் ஆண்டு வெளியான மாயநதி அனைத்து தரப்பு மக்களாலும் விரும்பப்பட்டது. அனைவரது பாராட்டுக்களையும் பெற்றார்.

ஹாலிவுட் தரத்தில்
அதை தொடர்ந்து மலையாளத்தில் இவருக்கு வாய்ப்புகள் குவிந்து வர தமிழில் விஷாலின் ஆக்சன் படத்தின் மூலம் அறிமுகம் செய்யப்பட்டார். இந்த படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் வந்து செல்வார். கேங்ஸ்டர் படங்களை தொடர்ந்து இயக்கி வரும் கார்த்திக் சுப்புராஜ் தனது அடுத்த திரைப்படத்தில் மீண்டும் கேங்ஸ்டர் கதையை கையில் எடுக்க இந்த முறை ஹாலிவுட் தரத்தில் உருவாகியிருக்கும் ஜகமே தந்திரம் திரைப்படத்தில் தனுஷ் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிப்பதாக சொல்லப்பட்டு வரும் நிலையில் இதில் கதாநாயகியாக ஐஸ்வர்யா லக்ஷ்மி நடித்துள்ளார்.

ஓடிடியில் நேரடியாக வெளியாகிறது
பெரும் எதிர்பார்ப்பில் ஜகமே தந்திரம் திரையில் வெளியாகும் என எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தயாரிப்பாளர் அதனை பிரபல ஓடிடி நிறுவனத்திற்கு பெரும் தொகைக்கு விற்றதாக சொல்லப்படுகிறது. எனவே இன்னும் ஓரிரு மாதத்தில் இந்த படம் ஓடிடியில் நேரடியாக வெளியாகிறது. ஐஸ்வர்யா லட்சுமிக்கு தமிழில் இது முதல் முழு கதாநாயகி படம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜிவ்வுன்னு இடை தெரிய
ஜகமே தந்திரம் படத்தை தொடர்ந்து மணிரத்னம் இயக்கி வரும் பொன்னியின் செல்வனில் ஒப்பந்தமாகி நடித்து வரும் ஐஸ்வர்யா லட்சுமிக்கு பிஸ்மி ஸ்பெஷல், குமாரி ஆகிய திரைப்படங்கள் மலையாளத்திலும் கைவசம் உள்ளது. இந்த நிலையில் நடுக்காட்டில் மஞ்ச காட்டு மைனா போல பாவாடை சட்டையில் சும்மா ஜிவ்வுன்னு இருக்கும் இடை தெரிய ஒரு சில புகைப்படங்களில் முன்னழகும் கச்சிதமாக தெரிகின்றவாறு யாருமில்லாத காட்டுக்குள் ஐஸ்வர்யா லட்சுமி எடுத்துள்ள இந்த லேட்டஸ்ட் போட்டோ சூட் புகைப்படங்கள் ரசிகர்களை ஈர்த்து வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











