Aishwarya lekshmi: சமந்தா மாதிரி ஐட்டம் பாட்டுக்கு ஆடணும்.. பூங்குழலிக்கு தைரியம் கொடுத்த கேரக்டர்!

ஐதராபாத்: நடிகை ஐஸ்வர்யா லெக்ஷ்மி அடுத்தடுத்து சிறப்பான கேரக்டர்களில் தமிழ், தெலுங்கு, மலையாள மொழி படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் மற்றும் பொன்னின் செல்வன் 2 படங்கள் இவருக்கு மிகச்சிறப்பாக அமைந்தன.

இந்த படங்களில் பூங்குழலி என்ற கேரக்டரில் நடிப்பை மட்டுமில்லாமல் கவர்ச்சியையும் சிறப்பாக வெளிப்படுத்தினார் ஐஸ்வர்யா லெக்ஷ்மி. இந்த படங்கள் தனக்கு மிகப் பெரிய நம்பிக்கையை கொடுத்ததாக அவர் பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். அடுத்தடுத்து தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தும் எந்த கேரக்டரிலும் நடிக்கலாம் என்ற நம்பிக்கையை இந்த படங்கள் கொடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார்

aishwarya lekshmi samantha ponniyin selvan movie

நடிகை ஐஸ்வர்யா லெக்ஷ்மி: நடிகை ஐஸ்வர்யா லெக்ஷ்மி தமிழ், தெலுங்கு, மலையாள மொழி படங்களில் அடுத்தடுத்து சிறப்பான கேரக்டர்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவரது நடிப்பில் பான் இந்தியா படமாக வெளியான பொன்னியின் செல்வன் மற்றும் பொன்னியின் செல்வன் 2 டங்கள் இவருக்கு மிகச்சிறப்பான கேரக்டரை பெற்றுக் கொடுத்தன. மணிரத்னம் இயக்கத்தில் உருவான இந்த படங்களில் பூங்குழலி என்ற கேரக்டரில் மிகவும் அழகாக தன்னை வெளிப்படுத்தியிருந்தார் ஐஸ்வர்யா லெக்ஷ்மி. இந்த படத்தில் மீனவப் பெண்ணாக வரும் ஐஸ்வர்யா லெக்ஷ்மியின் உடல் மொழி மிகச் சிறப்பாக அமைந்திருந்தது.

ஐஸ்வர்யா லெக்ஷ்மி தெளிவு: இந்த படத்திற்கு பிறகு தான் தன்னுடைய உடலின் பாகங்களிலும் நடிப்பை வெளிப்படுத்தலாம் என்பது குறித்து அறிந்து கொண்டதாக ஐஸ்வர்யா லெக்ஷ்மி தனது பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். தற்போது எந்த கேரக்டரிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தலாம் என்ற நம்பிக்கையையும் தான் பெற்றுள்ளதாக ஐஸ்வர்யா லெக்ஷ்மி தெரிவித்துள்ளார். கவர்ச்சி மட்டும் இல்லாமல் நடிப்பிற்கும் பொன்னியின் செல்வன் படம் மிகச் சிறப்பான தீனி கொடுத்ததாகவும் ஐஸ்வர்யா தெரிவித்துள்ளார். அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா லெக்ஷ்மிக்கு மலையாளத்தில் மாயநதி மற்றும் வரதன் படங்கள் மிகச்சிறப்பாக அமைந்துள்ளன.

சமந்தா குறித்து பாராட்டு: இந்நிலையில் நடிகை சமந்தா தொடர்ந்து பல ஆண்டுகளாக சினிமாவில் நீடித்து வருவது குறித்து தன்னுடைய பேட்டியில் பாராட்டு தெரிவித்துள்ள ஐஸ்வர்யா லெக்ஷ்மி, நீடித்த உழைப்பு மட்டுமே சினிமாவில் நிலைத்திருக்க ஒரே வழி என்றும் குறிப்பிட்டுள்ளார். 10 ஆண்டுகளுக்கும் மேல் சினிமாவில் நீடித்திருக்கும் சமந்தா, புஷ்பா படத்தில் ஊ சொல்றியா பாடலுக்கும் கொடுத்த அர்ப்பணிப்புதான் அவரது வெற்றிக்கு காரணம் என்று கூறியுள்ளார். இந்த அவரது முயற்சி மற்றும் அர்ப்பணிப்பு ஒரே மாதத்தில நடந்தது இல்லை என்றும் ஐஸ்வர்யா லெக்ஷ்மி மேலும் பாராட்டியுள்ளார்.

ஐட்டம் பாடலுக்கு ஆட தயார்: ஹலோ மம்மி, தக் லைஃப் போன்ற படங்களில் நடித்துவரும் ஐஸ்வர்யா லெக்ஷ்மி, தற்போது எந்த கேரக்டரில் நடிக்கவும் தான் தயாராக உள்ளதாகவும் கூறியுள்ளார். கவர்ச்சியை காட்டுவதாக இருந்தாலும் உணர்ச்சியை வெளிப்படுத்தும் கேரக்டராக இருந்தாலும் எந்த கேரக்டரிலும் நடிக்க தான் தயார் என்றும்தெரிவித்துள்ளார். குறிப்பாக சமந்தா நடிப்பில் வெளியான ஊ சொல்றியா போன்ற ஒரு பாடலுக்கு நடிக்கவும் தான் தயாராகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X