Aishwarya lekshmi: கருப்பு புடவையில் தேவதையாக ஜொலித்த ஐஸ்வர்யா லெக்ஷ்மி.. க்யூட் போட்டோஸ்!
சென்னை: தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார் ஐஸ்வர்யா லெக்ஷ்மி.
சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் 2 படம் இவருக்கு சிறப்பான விமர்சனங்களை பெற்றுத் தந்துள்ளது.
அடுத்ததாக இவரது நடிப்பில் துல்கர் சல்மானுடன் இணைந்து நடித்துள்ள கிங் ஆஃப் கோதா படமும் ஆகஸ்ட் 24ம் தேதி ரிலீசாகவுள்ளது.

கருப்பு புடவையில் ஜொலித்த ஐஸ்வர்யா லெக்ஷ்மி: நடிகை ஐஸ்வர்யா லெக்ஷ்மி தமிழ், தெலுங்கு, மலையாளம் என அடுத்தடுத்த மொழிப்படங்களில் நடித்து வருகிறார். தமிழில் இவரது நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் மற்றும் பொன்னியின் செல்வன் 2 படங்கள் இவருக்கு சிறப்பான வரவேற்பை பெற்றுத் தந்தன. இந்தப் படங்களில் பூங்குழலி என்ற கேரக்டரில் நடித்து அசத்தினார். அந்தக் கேரக்டருக்கான கெட்டப்பில் இவரை பார்த்த ரசிகர்கள் கிறங்கித்தான் போனார்கள்.

கடந்த ஆண்டில் அதிகமான படங்களில் நடித்தவர் என்ற பெருமையையும் தட்டிச் சென்றார் ஐஸ்வர்யா லெக்ஷ்மி. இவரது நடிப்பில் கடந்த ஆண்டில் புத்தம் புது காலை விடியாதா, கார்கி, கேப்டன், பொன்னியின் செல்வன், கட்டா குஸ்தி போன்ற படங்கள் தமிழிலும் மலையாளத்தில் நாக் அவுட், குமாரி மற்றும் தெலுங்கில் அம்மு, கோட்சே என மொத்தம் 9 படங்கள் வெளியாகின. இதில் கார்கி படத்தை இவர் தயாரித்திருந்தார். இந்தப் படத்தில் சாய் பல்லவி லீட் கேரக்டரில் நடித்திருந்தார்.

இதில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஓடிடியில் வெளியான அம்மு படத்தில் நடிப்பது தனக்கு சவால் நிறைந்ததாக இருந்ததாக அந்தப் படத்தின் ரிலீசின்போது பேசியிருந்தார் ஐஸ்வர்யா லெக்ஷ்மி. உண்மையை பேசுவதும் ஒருவரின் சுயத்திற்காக நிற்பதும் முக்கியமானது என்றும் அதைத்தான் இந்தக் கேரக்டர் பிரதிபலித்ததாகவும் ஐஸ்வர்யா மேலும் கூறியிருந்தார். இந்த ஆண்டிலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பொன்னியின் செல்வன் 2 படம் இவரது நடிப்பில் வெளியாகியுள்ளது. தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
அடுத்ததாக துல்கர் சல்மானுடன் இணைந்து நடித்துள்ளார் ஐஸ்வர்யா லெக்ஷ்மி. இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. பீரியட் படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் கேங்ஸ்டராக நடித்துள்ளார் துல்கர் சல்மான். ஓணம் பண்டிகையையொட்டி இந்தப் படம் அடுத்த மாதம் 24ம் தேதி ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, தன்னுடைய இன்ஸ்டாகிராமிலும் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார் ஐஸ்வர்யா லெக்ஷ்மி.
சமீபத்தில் திருமண நிகழ்சசி ஒன்றில் பங்கேற்ற அவர், கருப்பு நிற சேலையில் மாஸாக கலந்துக் கொண்டார். இந்த கெட்டப்பில் அவர் ஒரு போட்டோஷுட்டையும் எடுத்து அதன் புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். கருப்பு -வெள்ளையிலும் வண்ணத்திலும் இந்தப் புகைப்படங்கள் அழகு அள்ளுகிறது. தன்னுடைய அழகான மற்றும் அழுத்தமான பார்வையால் இந்தப் புகைப்படங்களுக்கு ஒளியூட்டியுள்ளார் ஐஸ்வர்யா லெக்ஷ்மி.


Click it and Unblock the Notifications











