Aiswarya rai: உலக அழகியாவே இருந்தாலும் அம்மான்னு வந்துட்டா.. இணையத்தை கலக்கிய ஐஸ்வர்யா ராய் -ஆராத்யா
மும்பை: நடிகை ஐஸ்வர்யா ராய் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழி படங்களில் அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்தவர். தமிழில் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ஜீன்ஸ் உள்ளிட்ட படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ள ஐஸ்வர்யா ராய் கடந்த 2007ம் ஆண்டில் பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனை காதல் திருமணம் செய்து கொண்டார்.
ஐஸ்வர்யா ராய் -அபிஷேக் பச்சன் ஜோடிக்கு ஆராத்யா பச்சன் என்ற மகள் உள்ள நிலையில் இவர்களுக்கு இடையில் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இவர்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது. இது குறித்து இவர்கள் இருவரும் மௌனம் சாதித்து வரும் நிலையில், அடுத்தடுத்த சம்பவங்களில் இவர்களின் பிரிவு உறுதிப்பட்டு வருவதாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

உலக அழகி ஐஸ்வர்யா ராய்: உலக அழகி பட்டங்களை பலர் தொடர்ந்து பெற்று வந்தாலும் உலக அழகி என்றாலே இந்திய மக்களுக்கு ஐஸ்வர்யா ராய் தான் கவனத்திற்கு வருவார். அந்த வகையில் அவர் தன்னுடைய அழகாலும் கவர்ச்சியாலும் தொடர்ந்து தன்னுடைய நடிப்பாலும் ரசிகர்களை கவர்ந்தவர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அடுத்தடுத்த மொழி படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்களுக்கு சொந்தக்காரராக இருந்த ஐஸ்வர்யா ராய், கடந்த 2007ம் ஆண்டு நடிகர் அமிதாப்பச்சனின் மகனும் பாலிவுட் நடிகருமான அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஐஸ்வர்யா -அபிஷேக் பிரிவு?: முன்னதாக ஐஸ்வர்யா ராய், சல்மான் கான் உள்ளிட்ட பல நடிகர்களுடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்ட நிலையில் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஐஸ்வர்யா. இவர்களுக்கு ஆராத்யா பச்சன் என்ற மகள் உள்ளார். இந்நிலையில் ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சனுக்கு இடையில் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் தொடர்ந்து பல மாதங்களாக தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால் இது குறித்து ஐஸ்வர்யா ராயோ அபிஷேக் பச்சன் மற்றும் அமிதாபச்சன் குடும்பத்தினரோ எந்த விதமான ஷேரிங்கையும் செய்யவில்லை.
அம்பானி திருமணத்தில் ஐஸ்வர்யா: ஆனால் அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் இருவரும் தங்களது வெட்டிங் மோதிரத்தை கழற்றி விட்டு பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருவதை பார்த்து, அவர்களது பிரிவு உறுதியாகியுள்ளதாக பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். இந்நிலையில் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் திருமண நிகழ்ச்சியில் தன்னுடைய பெற்றோருடன் அபிஷேக் பச்சனும் தன்னுடைய மகளுடன் ஐஸ்வர்யா ராயும் தனித்தனியாக கலந்து கொண்டனர். திருமணத்திற்கு அடுத்த நாள் நடந்த கொண்டாட்டத்திலும் தன்னுடைய மகள் ஆராத்யாவுடன் கலந்து கொண்டார் ஐஸ்வர்யா ராய்.

ஆராத்யாவை உள்ளங்கையில் தாங்கும் ஐஸ்வர்யா: இந்நிலையில் தன்னுடைய மகள் ஆராத்யாவை தன்னுடைய உள்ளங்கையில் வைத்து ஐஸ்வர்யா ராய் தாங்கியதை இந்த நிகழ்ச்சிகளில் பார்க்க முடிந்தது. ஆராத்யாவை புகைப்படங்கள் எடுப்பதற்கு முன்னதாக சிறப்பாக காண்பிக்கும் வகையில் ஹேர் ஸ்டைல், உடை உள்ளிட்ட அனைத்தையும் ஐஸ்வர்யா ராய் சரி செய்ததையும் பார்க்க முடிந்தது. இதையடுத்து இந்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வரும் ரசிகர்கள், அம்மா என்றால் சும்மா இல்லடா, இது உலக அழகிக்கும் பொருந்தும் என்பதாக பல கமெண்ட்களை செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











