23 ஆண்டுகளுக்கு முன்பு ஐஸ்வர்யா ராய் நடித்து வெளிவராமல் போன படம்.. திடீரென வைரலாகும் வீடியோ!

சென்னை: ஐஸ்வர்யா ராய் நடிப்பில் உருவாகி வெளி வராமல் போன படத்தின் பாடல் ஷுட்டிங் செய்யப்பட்ட காட்சி தற்போது வைரலாகி வருகிறது.

ஐஸ்வர்யா ராய் 1994ஆம் ஆண்டுக்கான உலக அழகி பட்டத்தை வென்றார். அதனை தொடர்ந்து நடிக்க தொடங்கிய அவர், தனது சினிமா கேரியரை தமிழ் சினிமாவில் இருந்துதான் ஆரம்பித்தார்.

மணி ரத்னத்தின் இருவர் படத்தில் தொடங்கியது ஐஸ்வர்யா ராயின் சினிமா வாழ்க்கை. அதன் பிறகு பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வர தொடங்கினார்.

ஐஸ்வர்யா ராய்

ஐஸ்வர்யா ராய்

தொடர்ந்து தமிழில் ஜீன்ஸ், ராவணன் உள்ளிட்ட படங்களில் நடித்தார் ஐஸ்வர்யா ராய். தமிழில் கடைசியாக ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்துடன் எந்திரன் படத்தில் நடித்தார். 2007ஆம் ஆண்டு அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டார் ஐஸ்வர்யா ராய். அவர்களுக்கு ஆரத்யா என்ற மகள் உள்ளார்.

சோஷியல் மீடியாவில்

சோஷியல் மீடியாவில்

பல்வேறு மொழி படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராயிக்கு இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளிலும் ரசிகர்கள் உள்ளனர். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள ஐஸ்வர்யா ராய்க்கு அங்கேயும் ஒரு பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது.

ஊதா நிற டிரெஸ்

ஊதா நிற டிரெஸ்

ஐஸ்வர்யா ராய் கடந்த 1997-ம் ஆண்டு 'ராதேஷ்யம் சீதாராம்' என்ற படத்தில் நடித்திருந்தார். சில காரணங்களால் அந்த படம் வெளியாகவில்லை. தற்போது அந்த படத்திற்காக பாடல் காட்சியாக்கப்பட்ட வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் ஊதா நிற டிரெடிஷ்னல் டிரெஸில் ஐஸ்வர்யா ராய் நடனமாடுகிறார்.

வர்ணிக்கும் ரசிகர்கள்

ரிகர்சல், ஆக்ஷன் என செல்கிறது அந்த வீடியோ. அதனை பார்த்த ரசிகர்கள் ஐஸ்வர்யா ராயின் அழகையும், அவரது முகபாவனைகளையும் வர்ணித்து கருத்து பதிவிட்டு வருகின்றனர். 23 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த படமாக இருந்தாலும் இப்போது கொஞ்சம் கூட மாற்றம் இல்லை என்றும் இப்போது இன்னும் அழகாக இருக்கிறீர்கள் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X